Published : 23 Feb 2016 09:49 AM
Last Updated : 23 Feb 2016 09:49 AM

உங்கள் குரல்: நெற்பயிர்களை சேதப்படுத்தி காட்டுப் பன்றிகள் அட்டகாசம்

காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தில், காட்டுப் பன்றிகள், நெற்பயிர்களை சேதப்படுத்துவதால், பல ஆயிரக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக ‘தி இந்து’ உங்கள் குரல் பகுதியில் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அரக்கோணம் செல்லும் சாலையில், கோவிந்தவாடி அகரம் கிராமம் அமைந் துள்ளது. இங்கு, புதுப்பாக்கம் கிராமத் துக்கு செல்லும் சாலையில், பொதுப் பணித் துறைக்கு சொந்தமான சிற்றேரி ஒன்று அமைந்துள்ளது. இப்பகுதி விவசாயிகள், கிணற்று நீர் பாசனம் மற்றும் ஏரி நீர் பாசனத்தை நம்பி, 500 ஏக்கர் பரப்பளவில், நெல் பயிரிட் டுள்ளனர். கோவிந்தவாடி அகரம் சிற்றேரி மற்றும் பெரிய ஏரியில் தண் ணீர் இல்லாமல் புதர்களாக மண்டியி ருந்ததால், அவற்றில் காட்டுப் பன்றிகள் தஞ்சம் புகுந்தன.

மேலும், இவை உணவுக்காக அவ்வப்போது, விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே காட்டுப் பன்றிகளை பிடிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என ‘தி இந்து’வின் உங்கள் குரல் பகுதியில் அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயி பரசுராமன் கூறியதாவது:

சிற்றேரி மற்றும் பெரிய ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளதால், ஏரியில் பதுங்கி இருந்த காட்டுப் பன்றிகள், வயல்வெளிகளில் நடமாடுவது அதிகரித்துள்ளது. கதிர் எடுக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிர்களை, காட்டு பன்றிகள் மிதித்து நாசம் செய்து வருகின்றன. பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அதிகாரி கூறும்போது, “காட்டுப் பன்றிகளை பிடிப்பதில் பல் வேறு சட்ட விதிகள் உள்ளன. எனினும், உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த பயிர்கள் தொடர்பாக, உரிய ஆவணங்களுடன் வனத்துறையிடம் மனு அளித்தால், நஷ்ட ஈடு பெற்றுத்தரப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x