Published : 22 Feb 2016 08:17 AM
Last Updated : 22 Feb 2016 08:17 AM
மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று முன் தினம் இரவு திருப்பூரில் நடந்தது.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூ னிஸ்ட் மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் ஆகியோர் பங்கேற்றனர்.
வைகோவின் கார் மோதி 2 பேர் பலியானதாகக் கூறி வாட்ஸ்-அப்பில் பரவிய வதந்திக்கு பதில ளித்து கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
கடந்த 17-ம் தேதி, அவிநாசி- அத்திக்கடவு திட்டம் கோரி கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக, பழநியில் இருந்து திருப்பூர் நோக்கி வந் தேன். அப்போது உடுமலை சாலையில் சண்முகநதி பாலம் அருகே, இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் சாலை விபத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். உடனடியாக அருகே சென்று, பதைபதைப்போடு பார்த் தேன். அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் உடல் சிதைந்து உயிரிழந்து கிடந்தனர்.
ஆனால், வாட்ஸ்- அப்பில், வைகோவின் கார் மோதி 2 இளை ஞர்கள் பலியானதாக செய்தி தொடர்ந்து பரப்பப்படுகிறது. என் கண்ணியத்தை சிதைக்க சிலர் முயற்சிக்கிறார்கள். சில அமைப்பு கள் என்னை களங்கப்படுத்த முயற் சிக்கிறார்கள். நான், திமுகவை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
காவல்துறை உயர் அதிகாரியி டம் பேசியபோது, “வாட்ஸ்- அப்பில் தகவல் பரிமாற்றம் செய்யும்போது, அதை உறுதிப்படுத்திக்கொண்டு மற்றவர்களுக்கு அனுப்புவது நல்லது. சமூக வலைதள வசதியை முறையாக, ஆக்கப்பூர்வ விஷயங் களுக்கு பயன்படுத்தினால் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்” என்றார்.
“பழநி வட்டம் அக்கமநாயக் கன்புதூரைச் சேர்ந்த சக்திவேல் (24), வரதராஜ்(25) ஆகிய 2 பேரும் வாகனத்தில் வந்தபோது, பழநி சண்முகநதி அருகே சரக்கு வேன் மோதி உயிரிழந்தனர். அப்போது அவ்வழியே வந்த வைகோ, அவர்களை பார்வை யிட்டு போலீஸாருக்கு உடனடி யாக தகவல் அளித்தார். வேன் ஓட்டுநர் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த தங்கவேலுவை கைது செய்துள்ளோம். அதற்குள், வைகோ கார் மோதியதாகக் கூறி வதந்தி பரவிவிட்டது” என்று பழநி தாலுகா போலீஸார் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT