Published : 23 Feb 2016 09:50 AM
Last Updated : 23 Feb 2016 09:50 AM

குப்பை கொட்டப்படுவதால் மாசுபடும் புழல் ஏரி

பல்வேறு உள்ளாட்சி பகுதிகளில் சேகரிக் கப்படும் குப்பைகள் புழல் ஏரியில் கொட் டப்பட்டு வருவதால், ஏரி மாசடைந்து வருவதாக ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக புழல் பகுதியைச் சேர்ந்த வாசகர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: புழல் ஏரி சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கும் முக்கிய நீராதாரங்களுள் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் முக்கிய நிலத்தடி நீராதாரமாகவும் உள்ளது. இந்த ஏரியைச் சுற்றியுள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள், அதன் எல்லையில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை, முறை யாக திடக்கழிவு மேலாண்மை செய்யா மல் புழல் ஏரியில் கொட்டி வருகின்றன. இதனால் ஏரியில் உள்ள நீர் மாசடைந்து, குடிக்க உகந்த நிலையை இழந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீரின் தூய்மையும் கேள்விக் குறியாகியுள்ளது.

நீர்நிலைகளை ஆக்கிரமித்ததால் ஏற்பட்ட மிகக் கொடூரமான விளைவுகளை நாம் சந்தித்து, சில மாதங்களே ஆன நிலையில், தற்போது உள்ளாட்சி அமைப்புகள் புழல் ஏரியை ஆக்கிரமித்து குப்பைகளைக் கொட்டி வருகின்றன. நீர்நிலைகளை பாதுகாக்கும் பொறுப்புமிக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் குப்பைகளை கொட்டி வருவதை உடனே நிறுத்த வேண்டும்.



அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... 044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x