Published : 12 Dec 2015 10:13 AM
Last Updated : 12 Dec 2015 10:13 AM
தமிழகத்தில் 22.3 லட்சம் ஹெக் டேர் நிலம் பாழ்பட்டதாக உள்ளது என தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.
தமிழகத்தில் பெருகிவரும் நகர்ப் புற குடியிருப்புகள், தொழிற்சாலை கள் போன்றவை விவசாய நிலங்களைக் குறைத்துக்கொண்டே வருகின்றன. மண் மாசுபடுதல், உற்பத்தித் திறன் குறைதல் மற்றும் மண் சீரழிவு போன்றவை உணவு உற்பத்தி தொலைநோக்கு திட்டத்துக்கு மேலும் பின்னடை வைத் தருகின்றன. மனிதனுக்குத் தேவையான உணவுகள் 90 சத வீதத்துக்கு மேல் மண்ணில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ பெறப்படுகின்றன. தற் போது விவசாயிகள் மண் பரி சோதனை செய்யாமலேயே பயிரிடு கின்றனர். மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதனால், மண்வளம் பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். கடைசி யில் அடுத்தபோக சாகுபடிக்கு பணமில்லாமல் விவசாயிகள் விளை நிலங்களை வீட்டுமனைகளுக்கு விற்பனை செய்வது தற்போது அதிகரித்துள்ளது. அதனால், விவசாய சாகுபடியின் பரப்பளவு குறைந்து உணவு உற்பத்தி வீழ்ச்சி யடைந்து வருகிறது.
இதுகுறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மண் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல் துறை தலைவர் பேராசிரியர் கோ.பாஸ்கர், உதவிப் பேராசிரியர் மணிகண்டன் ஆகியோர் கூறிய தாவது:
இந்தியாவில் பெருகிவரும் மக் கள்தொகையை கணக்கில் கொண் டால் 2030-ம் ஆண்டில் 330 மில்லி யன் டன் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். தற்போது 230 மில்லியன் டன் உணவுப்பொருட்கள் மட்டுமே உற்பத்தியாகின்றன. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் பாதிக்கும் மேலான நிலப்பரப்பு சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான நிலப்பரப்பு கள் மண் அரிமானத்தால் பாதிக்கப் பட்டுள்ளன. இவற்றில் தமிழகத்தில் 22.3 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாழ்பட்ட நிலமாக உள்ளதாக தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. கலப்பின ரக விளைச்சல், பூச்சிக்கொல்லி மருந்து கள், ரசாயன உரம் போன்றவை மண்ணிலுள்ள நுண்ணுயிர்களைக் கொல்கின்றன. இதுதவிர நவீன ஆலைக் கழிவுகள், பாலிதீன் கழிவுகள், சாக்கடை கழிவுகள், நகர்ப்புற குப்பைகள் போன்றவை மண்ணின் தரத்தை சீர் குலைக் கின்றன.
ஒரு கன சென்டிமீட்டர் மண் ணில் பல மில்லியன் உயிர்கள் வாழ்கின்றன. மண்ணானது மழை நீரை சேமித்து தாவரங்களுக்கு தேவையான அளவில் அதிக நாட் களுக்கு வழங்குகிறது. மழை நீரை உள்வாங்கி நிலத்தடி நீரை உயர்த்த வழிவகுப்பதுடன் மட்டுமில்லாது மழைநீரினால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதையும் குறைக்கிறது. விளைச்சலுக்குத் தகுந்தவாறு தற்போது மண்ணில் உள்ள சத்துகள் சுரண்டப்படுவது அதிகரிப்பதால் மண் வளம் குறைந்து, பயிர் ஊட்டச்சத்துகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட அளவில் உரங்களை ஒருங்கி ணைந்த உர நிர்வாக முறைகளில் கையாள வேண்டும். தகுந்த அளவு ரசாயன உரங்கள் மற்றும் இயற்கை உரங்களை கலந்து பயன்படுத்து வதன் மூலமும் மண் வளத்தை மேம்படுத்தலாம். அங்கக முறை வேளாண்மை மூலம் மண்ணின் தரத்தையும், கரிமப் பொருட்களின் அளவையும் அதிகரிக்கலாம். மாறி வரும் பருவநிலைக்கு ஏற்ப ஆராய்ச் சியாளர்கள் புதிய தொழில்நுட் பங்களை உருவாக்கி மண் வளத் தைப் பாதுகாக்க வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்.
மண் பரிசோதனை செய்து, அதற்கேற்ப பயிர் செய்ய வேண்டும். மண்வளத்தைப் பாதுகாப்பதில் மண்ணிலுள்ள கரிமப்பொருட்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மண்ணிலுள்ள கரி மப் பொருட்களை நிலைநிறுத்த பயிர் சாகுபடி செய்யும்பொழுது ஹெக்டேருக்கு 12.5 டன் எரு உரத்தை உழவு செய்யும்போது சேர்த்து உழ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT