Published : 12 Dec 2015 10:15 AM
Last Updated : 12 Dec 2015 10:15 AM

பேரிடர் சேதங்களை எதிர்கொள்ள சேவை வரி வருவாயிலிருந்து 50 சதவீதத்தை தேசிய பேரிடர் நிதியில் சேர்க்க வலியுறுத்தல்

நாடு முழுவதும் இயற்கை பேரி டர்களால் ஏற்படும் சேதங்களுக்கு நிவாரணம் வழங்க, மத்திய அரசு வசூலிக்கும் சேவை வரி வருவாயில் இருந்து 50 சதவீதத்தை, தேசிய பேரிடர் நிதியில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

கடந்த 20 நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் தீவிரமடைந்த வட கிழக்கு பருவமழையால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், டெல்டா மாவட் டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதி களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்யவும், சேதமடைந்த பொதுச் சொத்துகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் மத்திய அரசி டம் நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளன. தமிழக முதல் வரும் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ரூ.5,690 கோடி போதாது

இந்த நிலையில், தேசிய பேரி டர் நிதியில் அந்த அளவுக்கு நிதி இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். 2015-16-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் பேரிடர் நிதிக்கு ரூ.5,690 கோடிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை வைத்துதான் நாடு முழு வதும் ஏற்படும் பேரிடர்களுக்கு நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். இது எந்தவகையிலும் போதுமானது இல்லை என்றும், மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்குவதில்லை எனவும் குற்றச் சாட்டு எழுப்பப்படுகிறது.

மத்திய அரசு வசூலிக்கும் சேவை வரியில் ஆண்டுதோறும் 50 சதவீதத்தை பேரிடர் நிதிக்கு ஒதுக்குவது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும் என்கிறார் காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம்.

இதுகுறித்து அவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: 1994-ம் ஆண்டில் சேவை வரி வருமானம் ரூ.490 கோடி மட்டுமே. இது 2015-2016-ம் நிதியாண்டில் சேவை வரி உத்தேசமாக ரூ.2,09,774 கோடி கிடைக்குமென மத்திய அரசு பட் ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி வருவாயில் 50 சத வீதத்தை, ஏறத்தாழ ரூ.1 லட்சம் கோடியை தேசிய பேரிடர் நிதிக்கு ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக் கினால் நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் பேரிடர் ஏற்பட்டாலும், அதற்கு முழுமையான நிதியை ஒதுக்க முடியும்.

கண்டுகொள்ளாத அரசுகள்

நாடு முழுவதும் ஆண்டுதோறும் இயற்கை பேரிடர்களால் விவசாய பாதிப்புகள் மட்டுமே ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்படுகின்றன. இதற்கு முழுமை யான இழப்பீடுகள் வழங்கப்படு வதில்லை. இதற்கு காரணம் பேரிடர் நிதி போதுமான அளவுக்கு இல்லாததுதான்.

எனவே, சேவை வரி வருவாயில் 25 சதவீதத்தை விவசாய இழப்பு களுக்கும், 25 சதவீதத்தை மற்ற பாதிப்புகளுக்கும் ஒதுக்க வேண் டும். இந்த கோரிக்கையை 10 ஆண்டு களுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அரசுகள் இதை கண்டுகொள்ளவில்லை.

மக்கள் நலனைக் காக்க இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை வலியுறுத்த வேண்டும்.

இல்லையெனில் பேரிடர்கள் ஏற்படும்போது மாநில அரசுகள் கோரிக்கை விடுப்பதும், மத்திய குழு பார்வையிட்டு பரிந்துரைகளை அளிப்பதும், போதுமான நிதி இல்லை என மத்திய அரசு கைவிரிப்பதும் சடங்குகளாகவே தொடரும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x