Published : 21 Oct 2015 10:58 AM
Last Updated : 21 Oct 2015 10:58 AM

திமுக தேர்தல் அறிக்கையில் அடிப்படை வசதி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்: கனிமொழி எம்.பி.தகவல்

மக்களின் அடிப்படை தேவைகள், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி போன்றவற்றை நிறைவு செய்யும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை இருக்கும் என்று அக்கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவர் கனிமொழி தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் கனிமொழி, அ.ராமசாமி, ஆர்.சண்முகசுந்தரம், சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, என்.ஆர்.இளங்கோ, டி.கே.எஸ்.இளங்கோவன், தங்கம் தென்னரசு ஆகியோரைக் கொண்ட 9 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

நிறைவாக சென்னை தி.நகரில் நேற்று கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர். இதில் திமுக நிர்வாகிகள், பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது நிருபர்களிடம் கனிமொழி கூறும்போது, ‘‘மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் தேவையை உணர்ந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தமிழக அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப் தியை இந்த கூட்டங்களின்போது உணர முடிந்தது. மக்களின் அடிப் படை தேவைகள், உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை நிறைவு செய்யும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை இருக்கும்’’ என்றார்.

கோயில் நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் குடி யிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்தை செங்கல்பட்டு, பெரும்புதூர், மாமல்லபுரம் வரை நீட்டிக்க வேண்டும். மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவர வேண்டும். தியாகராய நகர் உஸ்மான் சாலை மேம்பாலத்தை சைதாப்பேட்டை வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திமுக குழுவினரிடம் பலர் மனுவாக அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x