Published : 26 Jun 2020 07:12 PM
Last Updated : 26 Jun 2020 07:12 PM

கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் வணிக உரிமையாளருக்கான 8 குறிப்புகள் - சமீர் தீக்‌ஷித், பொது மேலாளர், டாலி ஸொல்யூஷன்ஸ், மேற்கு மண்டலம் (Sponsored content)

2020 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, எப்போதும் நமது பூமி உறக்க நிலைக்குச் சென்றதில்லை. யாரும் எதிர்பார்க்காத ஒரு பொருளாதார சிக்கலாக இந்த நோய் தொற்று சூழல் மாறியுள்ளது. ஆனால், பெரிய இடையூறுகள், பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். பெரிய மாற்றங்கள், பெரிய வாய்ப்புகளையும், இலக்கை அடைய புதிய வழிகளையும் கொண்டு வரும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தான் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. பல வியாபாரங்கள் மீண்டுவர நீண்ட நாட்கள் ஆகும் என்றும், அதற்கு அவர்கள் பெரும் முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாறுதலை நோக்கிய இந்த பயணத்தில், ஒருவர் கவனம் செலுத்த வேண்டிய எட்டு வழிகள் உள்ளன.


1. நேர்மறையாக இருங்கள்: நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும் போது நேர்மறை விஷயங்களை ஈர்ப்பீர்கள். இந்த சூழலில் நேர்மறையான சிந்தனை உங்களையும், உங்கள் அணியையும் ஊக்குவிக்கும். மறுமலர்ச்சியை நோக்கிய நம் பயணத்தில் இதுதான் முதல் படி


2. வியாபார திட்டத்தை மதிப்பிடுங்கள்: இப்போதைய சூழலைப் பார்க்கும் போது, ஒருவர் தனது வியாபார இலக்குகளை மாற்றியமைத்து, உடனடியாக செயல்படுத்தக் கூடிய யதார்த்தமான, முழுமையான வளர்ச்சித் திட்டத்தை வகுக்க வேண்டும். நன்றாக யோசித்து அமல்படுத்தப்படும் யதார்த்தமான திட்டம், இந்த பயணத்தை எளிமையானதாக்கும். தேவையில்லாத வழிச் சிதறலை தடுக்கும்.


3. பணம் முக்கியம்: எந்த வியாபாரத்துக்கும், குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு இதுதான் அடிப்படை மற்றும் முதல் கவலையாக இருக்கும். நிறுவனத்தின் தற்போதைய சூழலில் நிதி மதிப்பீடு செய்வது முக்கியம். கட்டமைப்பு, ஆள் சேர்ப்பு, நிதி ஓட்டம், வர வேண்டிய பணம் மற்றும் பொறுப்புகளுக்கு தேவையான முதலீடு சம்பந்தமான முடிவுகளை எடுக்க சி.ஏ.வு.டன் கலந்தாலோசிக்க தேவை வரலாம்

4. தொழில்நுட்பத்தின் உதவி: நிஜ உலகில் விலகலையும், மெய்நிகர் உலகில் நெருக்கத்தையும் இந்த உலகம் பேணும். மாறும் தொழில்நுட்பத்தை புரிந்து அதற்கேற்ப நாம் பொருந்திப் போகத் தயாராக இருக்க வேண்டும். எல்லா நடைமுறைகளும் டிஜிட்டலாக மாற்றப்பட வேண்டும். வியாபாரத்தில் தொழில்நுட்ப பயன்பாடு என்பது, இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நிலையிலிருந்து கட்டாயமாக இருக்க வேண்டும் என்று நிலைக்கு மாறியுள்ளது. தொழில்நுட்ப உதவியுடன் தான் நாம் வாடிக்கையாளரை சென்றடைய முடியும்.

5. அரசு விதிமுறைகளை அறியவும்: அரசாங்கத்தின் நிவாரணம், சிஐஐ முதலிய வர்த்தக அமைப்புகளின் நிதி உதவி ஆகியவற்றைப் பற்றி உண்மையான, நம்பக்கூடிய தகவல்களைப் பெறுவது மிக முக்கியம். வியாபாரங்களுக்கும், தனி நபர்களுக்கும் உதவ அரசாங்கம் அறிவிக்கும் கொள்கைகள், வழிமுறைகளை தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கென நிதியமைச்சர் விரிவான ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார். உங்கள் வியாபாரம் நீடித்திருக்க அதை ஒழுங்காகப் புரிந்து கொண்டு, சரியாகப் பயன்படுத்துவது முக்கியம்.

சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார ஊக்கத் திட்டங்கள் குறித்த முக்கியத் தகவல்களைப் புரிந்துகொள்ள, இந்த காணொலியைப் பார்க்கவும்

தகுதி வரம்பு குறித்து மேலும் தெரிந்து கொள்ள, இந்த திட்டங்களின் பலனைப் பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பக்கத்தைப் பார்க்க க்ளிக் செய்யவும்.

6. டிஜிட்டல் பிராண்ட் உருவாக்கம்: வலுவான டிஜிட்டல் பிராண்டை உருவாக்குவது வியாபாரத்தில் இன்னொரு முக்கிய அம்சம். யார் நமது வாடிக்கையாளர் என்று தெரிந்து, அவர்களுக்கு நாம் யார் என்று எப்படி அறிமுகம் செய்வது, எது நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது, எதனால் நாம் சிறந்தவர்கள் என்பதைச் சொல்ல வேண்டும்.


7. மக்கள்: நீங்கள் உங்கள் அணியை நன்றாகப் பார்த்துக் கொண்டால், அவர்கள் உங்கள் வியாபாரத்தை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். நன்றாக செயல்படும் அணிக்கு, ஊக்குவிப்பும், நம்பிக்கையும் முக்கியமான தேவைகள். ஒருவரின் வேலை என்ன என்பது தெளிவாக விளக்கப்படும் போது, அறிவுறுத்தல்கள் கச்சிதமாக இருக்கும் போது பணிபுரிபவர் இன்னும் சிறப்பாக செயலாற்றுவார். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பொருந்துவதற்கு பயிற்சி செய்வது, அணியின் மன உறுதியை இன்னும் வலுப்படுத்தும்,

8. வாடிக்கையாளர்: 'நான் எனது வாடிக்கையாளருக்கு எந்த வகையில் சிறப்பாக உதவ முடியும்' என்பதே எல்லா தொழில்களும் பதிலளிக்க வேண்டிய கேள்வியாக இருக்கும். தானியங்கி இயந்திரத்தை விட மனிதர்களிடம் உரையாடத் தான் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விரும்புவார்கள். இந்த புதிய சகஜ நிலையின் முக்கிய விஷயங்கள் பற்றித் தெரிந்து கொள்ள, தனிப்பட்ட மேலாளர் ஒருவரி நியமிப்பது சிறந்த வழிமுறையாக இருக்கும்.

ஒவ்வொரு மாற்றமுமே நமக்கு இரண்டு தேர்வுகளைத் தரும். ஒன்று அந்த மாற்றத்தை ஏற்காமல் உறுதியாக நிற்பது. இரண்டு அந்த மாற்றத்தை ஆரத்தழுவி வரவேற்பது. மாறுதல் என்கிற சிக்கலை முதல் தேர்வு தவிர்க்குமென்றாலும், இரண்டாவது தேர்வு தான், வலுவான, பிரகாசமான எதிர்காலத்தை கட்டமைக்க உதவும். எப்போதும் ஒரு மாற்று இருக்கிறது என்பதை நம்புங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x