Published : 25 Sep 2015 10:23 AM
Last Updated : 25 Sep 2015 10:23 AM

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை வாழ்க்கை: பொதிகை ‘தி இந்து’ இணைந்து வழங்குகிறது

பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப் பாகி வரும் ‘குறையொன்றுமில்லை’ நிகழ்ச்சியில் அடுத்தடுத்த வாரங்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குழந்தைப் பருவம் மற்றும் இசை ஆர்வம் தொடங்கிய கால கட்டம் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் இடம்பெற உள்ளன.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாக வைத்து சனிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில் ‘குறையொன்றுமில்லை’ என்ற நிகழ்ச்சி கடந்த 2 வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பொதிகை தொலைக்காட்சியுடன் இணைந்து ‘தி இந்து’ நாளிதழ் வழங்கும் இந்த நிகழ்ச்சி 52 வாரங்கள் ஒளிபரப்பாக உள்ளது.

‘‘எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறப்பு, அவருடைய அம்மா சண்முக வடிவின் இசை ஆளுமை ஆகியவற்றை பற்றி விரிவாக கடந்த இரண்டு வாரங்கள் ஒளிபரப்பியதை தொடர்ந்து தன் தனித்த குரலால் உலகத்தை கட்டிப்போட்ட அந்த ஒற்றைக்குரல் யாருடையது? என்ற கேள்வியோடு கடந்த வார அத்தியாயம் நிறைவு பெற்றிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக நாளை முதல் அடுத்தடுத்த வாரங்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குழந்தைப் பருவம், இசை ஆர்வம், தனித்த ஆளுமை ஆகியவை பற்றி ஒளிபரப்பாகும்’’ என்கிறார் நிகழ்ச்சி தயாரிப்பாளர் வசுமதி ராஜன்.

அடுத்த மூன்று வாரங்களில் ஒளிபரப்பாக வுள்ள அத்தியாயங்கள் மற்றும் இந்நிகழ்ச்சியின் கதை மற்றும் ஆய்வு விவரங்களை சேகரித்து அளித்து வரும் சங்கர் வெங்கட்ராம் கூறியதாவது:

எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் அம்மா சண்முகவடிவுவை அவரது வீட்டில் பார்க்க இசைக்கலைஞர்கள் வருவார்கள். அந்த நாட்களில் ராம நவமி உற்சவ நிகழ்ச்சிக்காக இசைக்கலைஞர்கள் வீட்டுக்கு வந்து பாடுவார்கள். அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் வாய்ப்பு எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு எப்படி கிடைத் தது என்பதை அடுத்தடுத்த அத்தியாயங் களில் விரிவாகக் காணலாம்.

அதேபோல, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அண்ணன் சக்திவேல் மிருதங்க கலைஞர். தங்கை எம்.எஸ். வடிவம் மாள் வீணை வாசிப்பார். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை பயணத் துக்கு அவர்களுடைய பங்களிப்பு என்னவாக இருந்தது என்பதை யும் இத்தொடரில் சொல்ல விருக்கிறோம்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி தனது 10 வது வயதில் இசைத்தட்டு வெளியிட்டிருக்கிறார். அந்த வயதில் அம்மா சண்முக வடிவுடன் இசை ஒளிப்பதிவுக் கூடத்துக்கு சென்று வருகிறார். ஒருமுறை அவரை பாட வைக்கும் முயற்சியில் அவரது அம்மா ஈடுபடும்போது, ‘புகழ்பெறாத குரலாக இருக்கிறதே’ என்று அந்த இசை நிறுவனத்தினர் யோசித்திருக்கிறார்கள்.

இவர் பாடிய திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ், திருப்புகழ் பாடல்கள் எல்லாம் வெளிவந்தபிறகு அதே நிறுவனம் பின்னாளில் இவரது குரலில் பாடல் பதிவு செய்வதற்காக எதிர்பார்த்து காத்திருந்துள்ளது.

1932-ம் ஆண்டில் தியாகராஜ சுவாமிகள் இயற்றிய ‘எவரி மாட்ட’ பாடலை இவர் காம்போதி ராகத்தில் பாடியிருப்பார். அதன்பிறகு சில காலம் எம்.எஸ்.சுப்புலட்சுமி என்று அழைப்பதற்கு பதில் ‘எவரி மாட்ட’ சுப்புலட்சுமி என்றே அவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.

1933-ல் சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பாட வேண்டிய நிகழ்ச்சி இவருக்கு கிடைத்தது. பெரும் வாய்ப்பாக கிடைக்கப்பெற்ற அந்த நிகழ்ச்சி அவருக்கு நற்பெயரை ஈட்டிக்கொடுத்தது. அதேபோல கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் இவருக்கு கிடைத்த இசை நிகழ்ச்சி அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

இவற்றை எல்லாம் அடுத்தடுத்த வாரங் களில் ‘குறையொன்றுமில்லை’ நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

இவ்வாறு சங்கர் வெங்கட்ராம் கூறினார்.

வழித்துணையாய் வந்த சதாசிவம் எப்படி வாழ்க்கைத் துணையாய் மாறுகிறார், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் திரைத்துறை பயணம் எப்படி தொடங்கியது என்பதெல்லாம் அடுத்தடுத்த வாரங்களில் ஒளிபரப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x