Published : 04 Aug 2015 11:28 AM
Last Updated : 04 Aug 2015 11:28 AM

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு அடுத்தடுத்த நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு



டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு அடுத்தடுத்த நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பும், கலந்தாய்வும் நடத்த வேண்டும் என்று ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் திருச்சியைச் சேர்ந்த வாசகர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வு நடத்தி முடிவுகள் வெளியானவுடன் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அழைக்கப்பட்டு முதல் நாளன்று சான்றிதழ் சரிபார்ப்பும் மறுநாளில் கலந்தாய்வும் நடத்தப்பட்டன.

ஆனால், இந்த ஆண்டு நடந்த குரூப்-4 தேர்வில் பழைய முறை கைவிடப்பட்டு, ஒட்டுமொத்தமாக முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இனிமேல்தான் ஒவ்வொரு பணிக்கும் கலந்தாய்வு நடத்த வேண்டியுள்ளது.

அடுத்தடுத்த நாளில் சான்றிதழ் சரிபார்ப்பும், கலந்தாய்வும் நடத்தியே பணி நியமனத்தை முடிக்க ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டு அடுத்தகட்டமாகத்தான் கலந்தாய்வு நடத்தப்படும். இதனால் பணிநியமனம் முடிய காலதாமதம் ஆகும். எனவே இதை தவிர்க்க முன்பு இருந்து வந்ததைப் போன்று இனி அடுத்தடுத்த நாளில் சான்றிதழ் சரிபார்ப்பும், கலந்தாய்வும் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x