Published : 28 Apr 2020 04:51 PM
Last Updated : 28 Apr 2020 04:51 PM

அமிர்தா விஷ்வ வித்யாபீடம் மற்றும் இந்து தமிழ் திசை இணைந்து நடத்தும் ‘webinar’ எனும் இணைய வழி சந்திப்பு : கோவிட்-19 தொற்றுநோய் தாக்குதலுக்குப் பின் தொழிற்சாலைகள், பொறியாளர்கள் மீண்டெழுவதற்கான உரையாடல்

சென்னை.

கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தால் உலகமே ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டிருக்கிறது. இதில், உயர் கல்வி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வருங்கால பட்டதாரிகள், பொறியியல் துறையில் உயர் கல்வியை எவ்வாறு தொடர்வார்கள் என்பது குறித்து யாரிடமும் தெளிவில்லை. ஆனாலும் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இதனை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்திற்குப் பின்னர் மீண்டெழப் போகின்ற தொழிற்சாலைகள் குறித்தும் வருங்கால பொறியாளர்கள் 2024-க்குள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்பதையும் ஆராயும் வகையில் அமிர்தா விஷ்வ வித்யாபீடம் மற்றும் இந்து தமிழ் திசை உடன் இணைந்து ‘webinar’ எனும் இணைய வழி உரையாடலை நடத்தவுள்ளது.

அமிர்தா விஷ்வ வித்யாபீடம் கல்வித் துறையில் 25 ஆண்டுகளாக முன்னணியில் உள்ளது. சமூகத்திற்கான பொறியாளர்களை உருவாக்குவதில் அமிர்தா ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் முக்கிய பங்கு வகிக்கிறது. அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தின் வேந்தர் அம்மா கூறுகையில், “தைரியமாக இருங்கள், தைரியத்தை இழக்காதீர்கள். இந்த தைரியமே, கரோனா வைரஸை அழிப்பதற்கான உண்மையான வைரஸ் தடுப்பு ஆகும்” என்றார். அம்மாவின் செய்தியை மனதில்கொண்டு, எதிர்காலத்தைப் பற்றி ஒரு நம்பிக்கையான கண்ணோட்டத்தோடு, அதற்கேற்ப திட்டமிட ‘webinar’ எனும் இணைய வழி உரையாடலை நடத்தவுள்ளது. இந்த உரையாடல், வருங்கால பொறியாளர்களுக்குத் தேவையான உள்ளடக்கத்தையும், தொற்றுநோய்க்குப் பிறகு தொழில் நிலப்பரப்பு, பொறியாளர்களுக்கு நிலைமை எவ்வளவு உகந்ததாக இருக்கும் மற்றும் எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதலைக் கொண்டதாகவும் இருக்கும்.

நாளை (ஏப்ரல் 30, வியாழக்கிழமை) மாலை 5 முதல் 6 மணிவரை நடைபெறவுள்ள இந்த இணைய வழி உரையாடலில், அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தின் (பி.டெக்., சேர்க்கை) தலைவர் மகேஷ்வர சைதன்யா பங்கேற்று பேச உள்ளார். கணினி அறிவியல் களத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கற்பித்தல் அனுபவம் பெற்றுள்ள இவர், உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக்கின் போட்டித் தேர்வு - சர்வதேச கல்லூரி போட்டித் தேர்வின் (ஐசிபிசி) இயக்குநராக உள்ளார். இவரது 10 ஆண்டுகாலச் சேவைக்காக 2018-ஆம் ஆண்டில் ‘ஆசியா டிஸ்டிங்கிஷ்ட் லீடர்ஷிப் விருது’ விருதினைப் பெற்றுள்ளார்.

இந்த உரையாடலில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளை எழுதியிருக்கும் மாணவ-மாணவியர்களும்,
அவர்களது பெற்றோர்களும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புபவர்கள்
இங்கே பதிவு செய்யலாம் >>
REGISTER NOW

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x