Published : 30 Aug 2015 01:11 PM
Last Updated : 30 Aug 2015 01:11 PM

64 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழநி பச்சை மலையில் வாழ்ந்த கற்கால மனிதர்கள்: கற்காலக் கருவிகள் கண்டுபிடிப்பு

பழநி அருகே பச்சை மலையில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய 64 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, கற்கால கருவிகளை தொல்லியல் ஆய்வாளர்கள் நேற்று கண்டெடுத்துள்ளனர்.

தமிழரின் தொன்மையான, பண் பட்ட வாழ்வியல் நடத்தை முறை கள், மரபுசார் அறிவுவரலாறுகள், கலை, இலக்கிய, வணிகச் சான்று கள் தமிழக கிராமங்களில் பரவலாக அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஒட்டன் சத்திரத்தை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பச்சை மலையும் முக்கியத்துவம் பெறுகிறது.

இம்மலையின் அடிவாரத்தில் பழநி தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, வரலாற்று ஆர் வலர்கள் பெருமாள், ஆறுமுகம், மனோஜ்குமார், தங்கவலசு ஆகி யோர் மேற்கொண்ட ஆய்வில், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய 64 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந் தைய கற்கால கருவிகள், ஆயுதங் கள், பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

64 கற்கால கருவிகள்

இதுகுறித்து தொல்லியல் ஆய் வாளர், பழநியைச் சேர்ந்த நாராயண மூர்த்தி கூறியதாவது: பச்சை மலை வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த மலை அடிவாரத்தில் ஒரே நாள் ஆய்வில் 64 கற்காலக் கருவிகளை கண்டெடுத்துள்ளோம். இதில் பழைய கற்காலத்தின் இறுதிப் பகுதியில், சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயன்படுத்திய 6 பழைய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.

இவை கற்கால மனிதர்கள், வனவிலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தியவை ஆகும். மேலும், புதிய கற்காலத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த 26 செவ்வக வடிவக் கருவிகள், 19 சதுர வடிவக்கருவிகள், 10 நீள் செவ்வக வடிவக்கருவிகள், 2 விசிறி போன்ற அமைப்புடன் கூடிய கருவிகள் மற்றும் 1 தேய்ப்புக்கல் உள்ளிட்ட 58 கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன.

முதல் சங்ககாலத் தமிழ் மக்கள்

புதிய கற்காலத் தொடக்கத்தில் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விதவிதமான அளவு களில் இந்த கருவிகளை, வேட் டையாடுதல் மற்றும் ஆயுதங்களை உருவாக்க கற்கால மனிதர்கள் பயன்படுத்தி உள்ளனர். இவற்றில் சதுர, செவ்வக வடிவில் உள்ள கருவிகள் எடைக் கற்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். விசிறி போன்ற அமைப்புள்ள கருவிகள், தேய்ப்புக் கல் போன்றவை வேர், இலை, தண்டு மற்றும் மூலிகைகளை அரைக்கப் பயன்படுத்தி இருக்கலாம்.

புதிய கற்காலத்தின் தொடக்க மும், தமிழின் முதல் சங்க காலமும், ஏறத்தாழ சமமான கால கட்டத்தைக் கொண்டிருப்பதால் முதல் சங்க காலத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் இந்த கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்தி இருக்கலாம்.

12 கற்குழிகள்

இத்துடன் மூன்றாம் சங்க காலத் தைச் சேர்ந்த பானை ஓடுகளும், ஆட்டாங்கற்கள் இரண்டும் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. இங் குள்ள ஒரு பாறையில் 12 கற்குழிகள் (உரல்) காணப்படுகின்றன. இவை சங்ககால மக்கள் உணவு தானி யங்களை அரைத்து மாவாக்க பயன்படுத்தி இருக்கலாம். கற் குழிகளை உருவாக்கிப் பயன்படுத் தும் வழக்கம் கி.பி 18-ம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. இப்பழக்கம் தற்போதுதான் வழக்கொழிந்து விட்டது.

ஆகவே, இங்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பச்சை மலையில் மனிதனின் நட மாட்டமும் வாழ்க்கையும் பழைய கற்காலத்தில் இருந்தே, அதாவது சுமார் 64 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது உறுதியாகிறது என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x