Published : 10 Aug 2015 10:06 AM
Last Updated : 10 Aug 2015 10:06 AM
* 101- ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி, ஜூலை மாதம் வரை, அனைத்து வகைக் குற்றங்களுக்கும் மரண தண்டனை ரத்துசெய்திருக்கும் நாடுகளின் எண்ணிக்கை.
*607- உலகமெங்கும், கடந்த ஆண்டு மட்டும் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை. 2013-ஐ விட இது 22% அதிகம்!
* 22- கடந்த ஆண்டு மரண தண்டனையை நிறைவேற்றிய நாடுகளின் எண்ணிக்கை.
* 2,466- உலகமெங்கும் கடந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை. இது, 2013-ம் ஆண்டைவிட 28% அதிகம்.
* 220- அமெரிக்காவில் 2007 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை. இக்காலகட்டத்தில் 504 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
* 1,303- தேசியக் குற்ற ஆவணப் பிரிவு அறிக்கையின்படி 2004 முதல் 2013 வரை இந்தியாவில் விதிக்கப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை.
* 186- இந்தியாவில் 2007-ல் மட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை. ஓராண்டில் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது அப்போதுதான்.
* 3,751- இந்தியாவில் 2004 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT