Published : 04 Aug 2015 11:34 AM
Last Updated : 04 Aug 2015 11:34 AM
34.7 கோடி - உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை.
80% -க்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள், குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
2014-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 6.2கோடி
3.17கோடி - கடந்த 2000-ல் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை. அந்த ஆண்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியாதான் முதலிடம் வகித்தது. இரண்டாவது இடம் சீனாவுக்கு (2.08 கோடி). மூன்றாவது இடம் அமெரிக்காவுக்கு (1.7 கோடி).
2030-ம் ஆண்டில், நீரிழிவு நோய் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, 2005-ல் இருந்ததைவிட இரண்டு மடங்காகும் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்திருக்கிறது.
9 - 2014-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, மொத்த எண்ணிக்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளின் சதவீதம்.
7 - 2030-ம் ஆண்டுவாக்கில், மனிதர்களின் மரணத்துக்குக் காரணமாக இருக்கும் பாதிப்புகளில், நீரிழிவு நோய் வகிக்கப்போகும் இடம் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT