Published : 02 Jul 2015 05:06 PM
Last Updated : 02 Jul 2015 05:06 PM

டிஜிட்டல் இந்தியாவால் யாருக்கு பயன்?- வி.சி.கணேசன்

செய்தி: டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் வி.சி.கணேசன் கருத்து:



'டிஜிட்டல் இந்தியா' நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது. உலகத்தில் உள்ள ஏழை நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு இன்னும் தண்ணீர், மின்சாரம், கல்வி என்பதை பார்க்காத கிராமங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. மருத்துவ வசதி என்பது கோடிக்கனக்க்கான மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.

படித்த/படிக்காதவர்களின் வேலை இல்லா திண்டாட்டம் நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இந்நிலையில் டிஜிட்டல் இந்தியாவால் எதனை ஏழை மக்கள் பயன்பெறப் போகிறார்கள். இதனால் சில குறிப்பிட்ட பணக்கார/ நடுத்தர மக்களுக்கு (15%) பயன்படும். மற்றும் அம்பானிகளுக்கு பயன்படும்.

சீனா இன்று உலகத்தின் மிக பெரிய உற்பத்தி நாடாக அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவைப்போல் 10 மடங்கு பெரிய பொருளாதரத்தைக் கொண்டுள்ளது. ஆனால் அவர்களே 'நங்கள் இன்னும் வளரும் நாடுதான், அமெரிக்காவை எட்டிப்பிடிக்க 50 ஆண்டுகள் ஆகும்' என்று சொல்கிறார்கள்.

ஆனால் நம் நம்மை வல்லரசு என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமற்றிகொண்டு இருக்கிறோம். இந்த டிஜிட்டல் இந்தியாவால் ஏழைகள் பிரச்சினைகள் தீருமா? பதில் சொல்லுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x