Published : 15 Jul 2015 10:03 AM
Last Updated : 15 Jul 2015 10:03 AM
வாசகர் புகார்:>கடைகளில் சாதாரணமாக கிடைக்கும் குட்கா, பான் மசாலா - உங்கள் குரல்: வாசகர்களின் புகார்கள்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் சசிபாலன் கருத்து:
நான், சென்ற வாரம் குடும்பத்தினருடன் ஒரு வேன் மற்றும் காரில் ராமேசுவரம் சென்று வந்தேன். ராமேசுவரம் நுழைந்தவுடனேயே நகராட்சி நிர்வாகம் நான்கு சக்கர வாகனங்களுக்கு தலா ரூ.100/ வீதம் கட்டணம் வசூலிக்கிறது.
ஆனால் வாகனங்களை கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்த எவ்வித அடிப்படை வசதியும் நகராட்சியால் செய்யப்படவில்லை. மேலும் அக்னி தீர்த்த கடல் பகுதி முற்றிலும் சுகாதார சீர்கேடாக உள்ளது. பக்தர்கள் களைந்து போடும் துணிகள் ஆங்காங்கே சிதறி கிடப்பதுடன், நீராடும் அக்னி தீர்த்த கடலின் அடிப்பகுதியிலும் துணிகள் ஒன்றன் மேல் ஒன்றாக படிந்து அருவெறுப்பாக காலில் மிதிபடுகின்றன.
இது தவிர அக்னி தீர்த்த கரையில் ஆடுமாடுகளின் தொல்லை வேறு. அக்னி தீர்த்தத்தில் குளித்துவிட்டு, கோவிலுக்கு செல்லும் சாலை வெறும் காலில் நடப்பதற்கேற்ப சீராக இல்லாததால் முள்ளில் நடப்பது போன்ற நிலை உள்ளது.
இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வரும் இந்த கோவில், இந்து அறநிலையத் துறையாலும், நகராட்சியாலும் மிகவும் சுகாதாரமற்ற முறையில் பராமரிக்கப்படுவது வேதனைக்குரியது. எனவே 'இந்து' நாளிதழ் இதனை விசாரித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டுகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT