Published : 02 Jul 2015 05:07 PM
Last Updated : 02 Jul 2015 05:07 PM

இந்தியாவில் ஆதிக்க சிந்தனையின் சட்டங்கள் : டி.கே. நிதி

செய்தி:>தலைக்கவசம் அணிந்து வாழ்வை பாதுகாப்போம்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் டி.கே.நிதி கருத்து:

தலைக் கவசம் அணியாததால் யாருக்கு நட்டம். அவரவர்களுக்குத்தானே. ஆறு அறிவு படைத்தவர்கள் அவர்களாகவே அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளமாட்டார்களா? இதற்கு சட்டம் தேவையா? சட்டம் என்பது ஒருவர் செய்யும் காரியத்தால் பிறர் பாதிக்கப் பட்டால் அதைத் தடுப்பதற்கு இயற்றப் படுவதாகத்தான் இருக்க வேண்டும். அதை விடுத்து பிறருக்குத் துன்பம் விளைவிக்காத செயலுக்கு அரசு சட்டம் இயற்றுவதும், நீதி மன்றங்கள் அங்கலாய்ப்பதும் எதற்காக?

ஒருவேளை மக்கள் ஆறாவது அறிவு அற்றவர்கள் என்று நீதிபதிகளும், அதிகாரவர்க்கத்தினரும் எண்ணியதால் இருக்குமோ? அல்லது நாங்கள்தான் மக்கள் உயிரைக் காப்பதற்கான ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்று இவர்கள் எண்ணியதன் விளைவோ இந்தச் சட்டமும் இந்த தீர்ப்பும்? அதை வைத்து தங்களது ஆளுமையை மக்களுக்குக் காட்ட இவர்களின் முனைப்பாகக் கூட இருக்கலாம்.

தலைக் கவசம் ஒருவர் அணியாததால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பும் இல்லாத நிலையில், அதற்கு நீதிமன்றமும் அரசின் அதிகாரவர்க்கமும் மெனக்கெடுவது ஒரு ஆதிக்க வெறியே. இந்தியாவை இந்த ஆதிக்க வெறிதான் ஆண்டு கொண்டிருக்கிறது.

எந்த நாட்டில் பிறரைப் பாதிக்காத தனி மனித உணர்வுகளுக்கும் செயல்பாட்டுக்கும் எதிராக, தங்களை அறிவு ஜீவிகளாக பிரகடனப் படுத்திக் கொண்ட கூட்டத்தின் விருப்பத்திற்காக, சட்டம் இயற்றப் படுகிறதோ, அந்த நாடு சர்வாதிகாரிகள் வாழும் நாடாகத்தான் இருக்க முடியும்.

அது மக்களாட்சித் தத்துவமாகாது. இதுவும் ஒரு உயர் சாதியச் சிந்தனையே. உயர் சாதியம் என்பதே மற்றவர்களில் தனி நபர் சிந்தனையும், செயல்பாடும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதுதான். அதுதான் இந்தியாவில் அரங்கேற்றப் பட்டுக் கொண்டுள்ளது. நீதி மன்றங்களும் அந்த உயர் சாதியச் சிந்தனை தத்துவத்தைத்தான் பின்பற்றுகின்றன. சர்ச்சில் கூறியது உண்மையாகிறது. இந்தியாவில் மக்கள் மிருக்கக் காட்சி சாலையில் பாது காக்கப் பட்ட மிருகத்தைப் போல்தான் வாழவேண்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x