Published : 02 Jul 2015 05:06 PM
Last Updated : 02 Jul 2015 05:06 PM

முதலில் வாகனப் பயன்பாட்டை குறைப்பீர்: வெங்கடேசன்

செய்தி:>ஹெல்மெட்: வரவேற்பும்.. பாதிப்பும்..

'தி இந்து' ஆன்லைன் வாசகர் வெங்கடேசன் கருத்து:

பேருந்துகள், மின்சார ரயில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கார், மற்றும் பைக்குகள் பெருகிவிட்டன. மினி பஸ்கள், மெட்ரோ வேறு. பஸ் நேரத்திற்கு வருவதில்லை, கூட்ட நெரிசல், வியர்வை, இடிமாடுகள், லவ் டார்சர், சில்லறை பிரச்சனை, கட்டணம் என பல்வேறு சிக்கல்கள் பற்றி பேசுவது என்பது டைம் பாஸ்!

கடன் வாங்கியாவது பணக்காரனாவதுதான் மிடில் கிளாஸ்! வீட்டிலிருந்து காய்கறி வாங்க, சினிமா, கோயில், உடற்பயிற்சிக்கு செல்ல!? நடப்பதால், நடைபயிற்சியாகவும் இருக்கும். கொழுப்பும் குறையும்; பெட்ரோல் செலவும் இல்லை; வாகன நெரிசலையும் தவிர்க்கலாம்; இதற்கு சோம்பேறித்தனமும் வாட்ஸ் அப், சேட்டிங், வீடியோ கேம்ஸ்களுக்கு அடிமையாகிவிட்டதும் முக்கிய காரணங்கள்.

முதலில் தேவையின் அடிப்படையில் மட்டுமே வாகனத்தைப் பயன்படுத்துவது என்பதுதான் தீர்வு. வீலிங் செய்பவர்களிடமிருந்தும், காதைக் கிழிக்கும் ஆட்டோவிடமிருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுடையது!

பொதுமக்களும் பொறுப்பு உடையவர்களே. இதை மனதில் ஏற்றி நடந்தாலே எந்த ஹெல்மெட்டும் தேவையில்லை, லைசன்சும் தேவையில்லை. விபத்தில்லா பயணம் 100% நிச்சயம்! பறவையின் இறகை, உடலுக்குள் பொறுத்தி கண்டங்களைத் தாண்டி கடந்துவிடு, கொலம்பஸ்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x