Published : 09 Jul 2015 06:01 PM
Last Updated : 09 Jul 2015 06:01 PM
செய்தி:>முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மதத்தினருக்கும் குடும்ப கட்டுப்பாடை கட்டாயமாக்க வேண்டும்: சிவசேனா
'தி இந்து' ஆன்லைன் வாசகர் சம்பத்குமார் கருத்து:
இந்தியாவில் அதிக மக்கள்தொகையால் நிலம், நீர், காற்று போன்றவை மோசமாக மாசடைந்து உள்ளன. வனங்களின் பரப்பும் 50 ஆண்டுகளில் குறைந்து போய் விட்டது. பருவநிலை மாற்றம் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. மிதமிஞ்சிய மக்கள்தொகை பெருக்கதிற்கு முக்கிய காரணங்கள்:
1. ஆண் குழந்தை வேண்டும் என்ற மோகம் 2. குழந்தை இறைவன் கொடுக்கும் வரம் என்ற எண்ணம். 3. பாதுகாப்பான உடலுறவு பற்றிய விழிப்புணர்வு இல்லாதது. 4. நம் நாட்டின் தட்பவெப்ப சூழ்நிலை போன்றவை. இன்னும் 50 ஆண்டுகளில், காற்றை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும். கடுமையான பொருளாதார ஏற்றதாழ்வுகள் ஏற்படும்.
விவசாயம் செய்வதற்கு நிலமே இருக்காது.இளைஞர்களுக்கு எனது வேண்டுகோள்: 1. இரண்டு குழந்தைகளுக்கு மேல் கண்டிப்பாக பெற்றுக் கொள்ள வேண்டாம். 2. நமக்கு பிறக்கும் குழந்தைகள் மட்டும் இறைவன் கொடுத்த வரம் அல்ல. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள ஆசை எனில் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளலாம். 3. தேவையற்ற கரு உண்டாதலை தடுக்க பாதுகாப்பான உடலுறவு பற்றிய விழிப்புணர்வு தேவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT