Published : 15 Jul 2015 10:04 AM
Last Updated : 15 Jul 2015 10:04 AM

தங்கள் வளங்களைப் பெருக்கிக்கொள்ளும் எம்பிகள்: நூஹுதம்பி

கட்டுரை:>எப்படிச் செலவழிக்கிறார்கள் எம்.பி-க்கள்?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மாகி நூஹுதம்பி கருத்து:

நிதி ஒதுக்கீட்டில் திட்டங்கள் நிறைவேற்றும்போது அதில் தங்களுக்குக்கு எத்தனை விழுக்காடுகள் தேறும் என்ற எண்ணம் உள்ளவர்களே மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்வதற்காகவா இப்படி போட்டி போட்டுக் கொண்டு பணத்தை தண்ணீராக செலவழித்துக் கொண்டு அங்கு போகிறார்கள்.

செலவழித்ததை விட எத்தனை மடங்கு லாபம் பெறலாம் என்பதுதான் கணக்கு. இல்லாவிட்டால் நேற்று சாதாரண வருமானத்தில் ஓடிக் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் இன்று செல்வம் வீடு கார் பங்களாக்கள் கரை புரண்டு ஓடுகின்றனவே அவை எங்கிருந்து வருகிறது.

நாடாளுமன்றம் செல்லும் அதிகமான விழுக்காடு உறுப்பினர்கள் கொலை கொள்ளை பாலியல் பலாத்காரம் மணல் கொள்ளை மற்றும் நாட்டின் வளங்களை கொள்ளை அடித்து தங்கள் சுய வசதிகளை பெருக்கிக் கொள்ளவே செல்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் யாராவது வெளியிட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

வீட்டுக்கு வீடு வாசல்படி என்று அதை பேசாதீர்கள். இதற்கு எந்த தலைவர்களும் சளைத்தவர்கள் இல்லை, நீங்கள் அத்தனை பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x