Published : 09 Jul 2015 06:02 PM
Last Updated : 09 Jul 2015 06:02 PM
கட்டுரை:>நிலத்தடிநீரின்றி எப்படி நீடிக்கும் உலகு?
'தி இந்து' ஆன்லைன் வாசகர் சுப்பிரமணியன் கருத்து:
நீரின்றி அமையாது உலகெனின் யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு என்ற வள்ளுவர் வாக்கு எதனை தீர்கதரிசனமானது ஆயிரத்து தொளாயிரத்து இருபதுகளிலேயே நோபெல் பரிசு விஞ்ஞானி சர் சி வி ராமன் எக்காரணம் கொண்டும் பூமிக்கு கிழே உள்ள நீரினை அதிகமாக உறிஞ்சக் கூடாது என்றார்.
மேலும் பூமியின் மேலே உள்ள குளங்கள் ஆறுகள் ஏரிகள் குட்டைகள் கிணறுகள்தான் நீராதாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். இது மட்டுமே பூமியின் நீர் சமநிலையைப் பாதுகாக்கும் என சர்.சி.வி. ராமன் அப்போதே தீர்க்க தரிசனமாக சொன்னார்.
இவரும் தமிழர் என நாம் பெருமை படலாம் ஆனால் என்ன பிரயோஜனம் நகர் மேம்பாடு என்று பல குளங்கள் ஏரிகளை தூரத்து விட்டோம். மழை சேமிப்பும் யாரும் சரியாக செய்வதில்லை. எதிர்காலம் நீரை பொறுத்த வரை ஒரு புதிர் காலம் தான். அடுத்த தலைமுறை சந்ததிகளை கடவுள் கூட காப்பாற்ற முடியுமா தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT