Published : 09 Jul 2015 06:02 PM
Last Updated : 09 Jul 2015 06:02 PM

தனிமனித ஒழுக்கங்களில் நம் பங்களிப்பு என்ன? - மார்டின்

செய்தி: மேலும் ஒரு அக்கிரமம் அரங்கேற்றம்: சிறுவனை மது குடிக்க வைக்கும் அடுத்த வாட்ஸ்அப் வீடியோ காட்சி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மார்டின் கருத்து:

சிறுவனை மது குடிக்க வைக்கும் அடுத்த வாட்ஸ்அப் வீடியோ காட்சிகள் தொடர்ந்து அரங்கேறி வருவது வருத்தத்தை அளிக்கிறது. இது ஒரு குடி காலமோ! கல்வி பயனற்று போனது தெளிவாக தெரிகிறது, நாட்டில் உள்ள மெத்த படித்த கல்விமான்களும், ஆன்றோர் சான்றோரும், தெளிவும் அறிவும் பெற்றவுடன் சமுதாயத்தில் இருந்து அந்நியப்பட்டதன் விளைவுகளில் ஒன்று தான் இது,

மேம்பட்ட மனிதனின் பார்வையில் சராசரி மனிதனின் தவறுகள் இங்கே தலைப்பு செய்தியாக, தலையங்கங்களாக முக்கியத்துவம் பெறுகிறது, கூப்பாடு போடுகிற மனிதக் கூட்டத்தில் தனி மனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம், தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் தெளிவான பங்களிப்பு எத்தனை சதவீதம் இருக்கிறது என்பதை அவரவர் மனசாட்சியைத் தொட்டு பார்த்து பேசவேண்டும். நாகரீகமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களாக தம்மைநினைத்துக்கொண்டிருப்பவர்கள்.

மும்பை கொல்கத்தா போன்ற நகரங்களில் பகிரங்கமாகவும், இங்கே தமிழ்நாட்டில் ரகசியமாகவும் 16 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளைகளை பாலியல் தொழிலில் இறக்கிவிடுகிற அவலங்கள் இன்னமும் தொடர்வதை வேடிக்கை பார்க்கிறார்களே. மெத்த படித்தவர்கள், குழந்தை தொழிலாளர்கள் வைத்திருக்கும் கடைகளில் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்களே. சரி செய்ய வேண்டியது மெத்தப்படித்த தெளிவான அறிவுடைய தனி மனிதனின் சமூக பொறுப்புணர்வு மட்டுமே ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x