Published : 15 Jul 2015 10:03 AM
Last Updated : 15 Jul 2015 10:03 AM

ரயிலில் கேமரா பொருத்தவேண்டும்: துரைராஜ்

செய்தி:>சென்னை சென்ட்ரல் அருகே ரயிலில் முகமூடி கொள்ளை: பயணிகளுக்கு அரிவாள் வெட்டு

'தி இந்து' ஆன்லைன் வாசகர் துரைராஜ் கருத்து:

உலகத்திலேயே அதிகமான தொழிலார்களை கொண்டு அவர்களுக்காக பல கோடிகளை வாரி இறைக்கும் இந்தியன் ரயில்வே, பயணிகளின் பாதுகாப்பிற்காக பேசுவது எல்லாமே ஏட்டளவில்தான் உள்ளது.

ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த பிஜேபி அரசு அதில் மக்களுக்கு பயனற்ற அம்சங்களே வைத்திருந்தது. அதை மறைக்கவே நொண்டி சாக்கு நாங்கள் பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என்று. இவர்கள் பயணிகளின் பாதுகாப்பிற்காக கொடுத்த முக்கியத்துவம் ரயில் ஊருக்குள் வந்தபிறகும் கொள்ளையிடுவதிலே தெரிகிறேதே.

சாதாரண லட்டிக் கம்பை வைத்துக் கொண்டு உலக தீவிரவாதிகளை கூட வென்றுவிடுவோம் என்ற மிதப்பில் காவல் துறையினர் உள்ளனர். ரயில் பெட்டியினுள் இல்லவிட்டலூம் அதன் இரண்டு வாசல்களிலும் கேமரா பொருத்தி ஒரு பெட்டியினுள் கண்ட்ரோல் ரூம் அமைத்து கண்காணிப்பதை ஏற்படுத்தியிருந்தால் அது குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கும், குற்றத்தை குறைப்பதற்கும் பெருமளவு உதவியிருக்கும்.

தானியங்கி கதவுகள் போன்ற நவீன விஷயங்களை பழைய ரயிலில் பொறுத்த சாத்தியம் இல்லையென்றால் புதிய பெட்டியை ஏற்படுத்துங்கள். இந்தியன் ரயில்வேயில் பணம் இல்லையா என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x