Published : 20 Jul 2015 05:59 PM
Last Updated : 20 Jul 2015 05:59 PM
'தி இந்து' ஆன்லைன் வாசகர் நக்கீரன் கருத்து:
தண்ணீர் ஒரு முக்கிய தேவை. மழைநீர் சேகரிப்பு, மரங்கள் நடுதல் ஆகியவை தண்ணீர் சேமிப்பை அதிகரிக்கும். அதைவிட முக்கியமானது தண்ணீரை வீணாவதைத் தவிர்ப்பது. கருவேல மரங்களால் ஏற்படும் பதிப்பையும் அது ஏற்படுத்தும் பாதிப்பையும் பல ஆண்டுகளாக பலர் கூறி வருகிறார்கள்.
அது போலவே நீர் நிலைகள் அழிக்கப்பட்டு கட்டிடங்களாக மாற்றப் படுகிறது. அரசு இதில் தன் முயற்சியைத் தொடங்கினால் தண்ணீர்த் தட்டுப்பாடு குறையும் வாய்ப்புகள் அதிகம். வயல்களில் இருக்கும் கருவேல மரங்களை அழிப்பது மிக முக்கியம். அதை விவசாய அலுவலகங்கள் மூலம் செய்யலாம்.
ஏரிகளையும் குளங்களையும் அழித்து வீடு கட்டுவதையும், ஆக்கிரமிப்பு செய்வதையும் தடுக்கலாம். மாவட்ட ஆட்சியர், வட்டசியர் இதை செய்யலாம். வீடுகள் அதிகம் இல்லாத இடங்களில் விவசாய நிலங்களை அழித்து வீட்டு மனைகள் போடுவதைத் தடுக்கலாம்.
இதை எல்லாம் செய்தாலே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். இதைவிட்டு காவிரி தண்ணீர் வரவில்லை என்று மட்டும் ஒருவரை ஒருவர் குறை கூறுவதில் பயனில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT