Published : 06 Jul 2015 06:28 PM
Last Updated : 06 Jul 2015 06:28 PM

சலுகை குற்றச்சாட்டிலிருந்து விடுவியுங்கள்: ரியாஸ்

செய்தி:>ஹஜ் பயணிகளுக்கான இடங்களை உயர்த்துக: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ரியாஸ் கருத்து:

முஸ்லிம்கள் புனித ஹஜ் யாத்ரை செல்வதற்கு மத்திய அரசு சலுகை செய்வது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு, ஆண்டுதோறும் அது ஒரு சர்ச்சையை உருவாக்கி வருகின்றது. ஹஜ் செல்லும் பயணிகளுக்கு விமானக் கட்டணத்தில் அளிக்கப்படும் தள்ளுபடியை, மானியம் என்று மத்திய அரசு சொல்கின்றது.

நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஏர் இந்தியா விமானத்திற்கு அந்த மானியம் தரப்படுகிறது. ஹஜ் பயணிகளுக்கு மக்கா செல்வதற்கு அனுமதி மட்டும் தந்து விட்டு மற்ற ஏற்பாடுகளை பயணிகளின் பொறுப்பில் விட்டுவிட்டால் முஸ்லிம்களுக்கு மட்டும் சலுகை என்கிற குற்றச்சாட்டிலிருந்து மத்திய அரசு விடுபடும். ஹஜ் பயணிகள் இதை விட குறைந்த கட்டணத்தில் விமானம் ஏற்பாடு செய்து கொள்ள முடியும். அரசு செய்யுமா?

ஹஜ் பயணம் என்பது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று. உடல் நலமும், செல்வ வளமும் உள்ள முஸ்லிம்கள் ஆயுளில் ஒரு முறை ஹஜ் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற அரசின் அனுமதியும், ஒத்துழைப்பும் இருந்தாலே போதும். சுமார் மூன்று லட்ச ரூபாய் செலவில் பயணிக்கும் ஒருவருக்கு அரசின் சொற்ப மானியம் (சுமார் 12000 ரூபாய்) ஒரு பெரிய விஷயமல்ல.

விமான ஏற்பாட்டிலிருந்து அரசு விலகி விட்டால், இதை விட கூடுதலான கட்டணச் சலுகையினை விமான நிறுவனங்களிடமிருந்து பெற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x