Published : 21 Jul 2015 10:26 AM
Last Updated : 21 Jul 2015 10:26 AM

எண்ணென்ப... - மரண தண்டனை கணக்கு

1,790 - இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில், நீதிமன்றங்கள் விதித்த மரண தண்டனைகளின் எண்ணிக்கை.

1,512 - மரண தண்டனைகள், உயர் நீதிமன்றத்தால் முடிவுசெய்யப்பட்டவை. எஞ்சியவை முடிவுகளுக்காகவும், மறு விசாரணைக்காகவும் காத்திருக்கின்றன.

4.6 - 2000-க்குப் பிறகு அறிவிக்கப்பட்ட மரண தண்டனைகளில், உறுதிசெய்யப்பட்ட சதவீதம்.

25 - கடந்த 15 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மரண தண்டனைகளில், உத்தரப் பிரதேசத்தின் சதவீதம்.

27.80 - உயர் நீதிமன்றங்களால் ரத்துசெய்யப்பட்ட மரண தண்டனைகளின் சதவீதம். 9.10% மரண தண்டனைகளை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது.

31.70 - உச்ச நீதிமன்றம் உறுதிசெய்த மரண தண்டனைகளின் சதவீதம். உயர் நீதிமன்றங்களால் உறுதிசெய்யப்பட்ட மரண தண்டனைகளின் சதவீதம் 14.20தான்!

55.40 - உயர் நீதிமன்றங்களால் தண்டனைக் குறைப்பு பெறப்பட்ட மரண தண்டனை வழக்குகளின் சதவீதம். உச்ச நீதிமன்றம் 59.10% மரண தண்டனைகளில் தண்டனைக் குறைப்பு செய்திருக்கிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x