Published : 06 Jul 2015 06:28 PM
Last Updated : 06 Jul 2015 06:28 PM

அமைச்சருக்கு தண்டனை தர வேண்டும்: துரைராஜ்

கரு த்துக்கேட்பு:>விவாதம்: அத்துமீறும் சமூகத்தின் கரங்கள்

'தி இந்து' ஆன்லைன் வாசககர் துரைராஜ் கருத்து:

பெரும்பாலான ஆண்களின் மனங்களில் வக்கிரங்கள் இருந்தாலும் பொது இடங்களில் வரம்பு மீறும் தைரியம் காஷ்மீர் அமைச்சர் போன்று ஒரு சில ஆண்களுக்குதான் வரும்.

இவர்கள் சட்டம் நம்மை என்ன செய்துவிடும் என்று நினைக்கிறார்களா இல்லை வருவது வரட்டும் அப்புறம் பேசி சாமாளித்துக் கொள்வோம் என்ற நினைப்பா இல்லை நாகரிகமற்ற இந்த செயலை உயர்ந்த பதவி, வயது மூப்பு போன்ற காரணங்களால் யாரும் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்ற கண் மூடித்தனமான அறியாமையா என்று தெரியவில்லை?

தவறு செய்கிறவர்களை தண்டிக்கக் கூடிய தலைமை இடத்தில் இருப்பவர்களும் வாய் மூடி இருப்பதுதான் இவர்களது பலமே. ஆனால் இவர்களை மாதிரி ஆட்களை திருத்துவது என்பது அப்படி ஒன்றும் கடினமான காரியம் இல்லை. ஏதோ ஒரு விதத்தில் இவர்களுக்கு ஒரு மறைமுகமான தண்டனை கொடுத்தாலே போதும் மற்றவர்கள் திருந்துவார்கள்.

அடிப்படை நாகரிகம் கூட தெரியாத இவருக்கு இவர் இருக்கும் கட்சியின் சார்பாக என்ன கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையில் படமாக வந்த இந்த சம்பவத்தில் இருப்பது தமிழக அமைச்சர் என்றால் இந்நேரம் அவரது பதவி இருந்திருக்குமா முதலில் அந்த தைரியம்தான் அமைச்சருக்கு வருமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x