Published : 09 Jul 2015 06:02 PM
Last Updated : 09 Jul 2015 06:02 PM
செய்தி>கோவையில் மது அருந்திய நிலையில் பள்ளி மாணவி மீட்பு
'தி இந்து' ஆன்லைன் வாசகர் சேரலாதன்
அதிர்ச்சியும், வருத்தமும் தரும் செய்தி. மேட்டுப்பாளையம்-கோவை-மேட்டுப்பாளையம் தினமும் காலை-மாலை வரும் இரயிலிலும் பஸ்ஸிலும், பயணித்து, இவர்களை அருகில் பார்த்த அனுபவத்தில் இதைச் சொல்கின்றேன்.
இவர்கள் சகமாணவர்களுடன் மட்டும் பழகுவதில்லை, கல்யாணமானவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வேலை செய்வது, படிப்பது போல் நடித்து இவர்களை ஏமாற்ற வருபவர்கள், தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் என்று பலரோடு பழகுகின்ற வாய்ப்பு கிடைக்கின்றது.
இது இவர்கள் கெட்டுப் போவதற்கு வாய்ப்புகளை தருகின்றது. இதில் இவர்களோடு பயணிப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் அல்ல. (நானும் இவர்களோடு பயணித்திருக்கின்றேன்) பெரும்பாலானவர்கள் நல்லவர்கள். பல நேரங்களில், இவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவதையும் கவனித்திருக்கின்றேன்.
ஆனாலும், இந்தப் பிள்ளைகளை கெடுப்பதற்கென்றே சிலர் பயணிக்கின்றனர். இந்த சமூக விரோதிகளுக்கு இவர் பலியாகிவிடுகின்றனர். இதை தடுக்க இவர்கள் பெற்றோர்களில் யாராவது ஒருவர் இவர்கள் பயணிக்கும் பேரூந்திலோ இரயிலிலோ தற்செயலாக பயணிப்பது போல் பயணித்து நிலைமை அறிந்து கொள்ளவேண்டும். சமூக அக்கரை கொண்ட சக பயணிகளும் இதற்கு உதவ வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT