Published : 18 Jul 2015 05:01 PM
Last Updated : 18 Jul 2015 05:01 PM
செய்தி:>அலுவல் பயணத்திலும் குழந்தைக்கு தடையின்றி தாய்ப்பால்: ஐபிஎம் புதிய முயற்சி
'தி இந்து' ஆன்லைன் வாசகர் வை.ராஜேந்திரன் கருத்து:
நல்ல தொடக்கம். இந்த நடைமுறையை அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தலாம். பன்னாட்டு நிறுவனங்கள் நமது பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை உதாசீனப் படுத்தி ஊழியர்களை மேலை நாட்டு கலாச்சாரத்தை புகுத்தி வருகின்றனர்.
பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டின் நேரத்துக்கு நமது நாட்டு ஊழியர்களை பகல் இரவு பாராமல் நடுநிசி வரையிலும் அதற்கு மேலும் பணி செய்ய அறிவுறுத்துகிறார்கள். இதனால் நமத நாட்டின் பண்பாடு கலாச்சாரம் சீரழிக்கப்படுவதுடன் அவர்களை மேலை நாட்டு கலாச்சாரத்துக்கு பழக்கப்படுத்தி உடன்பட வைக்கும் நிலை உள்ளது.
அதனையும் நிவர்த்தி செய்ய வேண்டும். மிகுதியான சம்பளம் தருவதால் ஊழியர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள் என்பது உண்மை. இவர்கள் நாகரீக கொத்தடிமைகள் அவ்வளவுதான். இதனை மத்திய மாநில அரசுகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT