Published : 22 Jun 2015 06:00 PM
Last Updated : 22 Jun 2015 06:00 PM

ஆண்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல: சம்பத்குமார்

கட்டுரை:>சமூக வலைதளங்களில் மீறப்படும் எல்லைகள்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சம்பத்குமர் கருத்து:

கற்பழிப்பு குற்றவாளிகளையும், பெண்களை கேலி கிண்டல் செய்பவர்களையும் ஆண்களின் பிரதிநிதிகளாக பார்க்கும் அணுகுமுறை மாற இன்னும் எத்தனை யுகங்கள் ஆகுமோ? அவர்களை சமூக குற்றவாளிகளாகப் பார்க்க வேண்டும். தண்டிக்க வேண்டும்.

அதை விடுத்து பெண்களின் வேதனைக்கு ஆண்கள்தான் காரணம் என்று பாலின மொழியில் தீர்ப்பு எழுதுவது இதற்கு தீர்வாகாது. ஆணும், பெண்ணும் சமம் என்றாலும், இயற்கை வகுத்த விதிகளின்படி ஆண், பெண் இருவரும் உடல் மற்றும் குண பண்புகளில் வித்தியாசம் கொண்டவர்கள். ஆணை, பெண்ணோ அல்லது பெண்ணை ஆணோ முழுமையாக புரிந்துகொள்வது சாத்தியமில்லை.

தந்தை, அண்ணன், தம்பி, நண்பன், காதலன், கணவன், மகன் என்று உங்களோடு ரத்தபந்தமும் உறவு பந்தமும் உள்ள ஆண்கள் எல்லாரும் நல்லவர்களாக தெரியும் போது, ரத்தபந்தமும் உறவு பந்தமும் அல்லாத மூன்றாம் நபர் ஆண்கள் மட்டும் ஆணாதிக்க வெறி பிடித்தவர்களாக தெரிய என்ன காரணம் என்று புரியவில்லை. சமூகத்தில் என்றும் எதிர்மறையான செய்திகளும், செயல்களும் மட்டுமே கொண்டாடபடுகின்றன என்பது வேதனையான உண்மை..



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x