Published : 12 Jun 2015 06:49 PM
Last Updated : 12 Jun 2015 06:49 PM
செய்தி:>பாகிஸ்தான் ஒரு மிகப்பெரிய அணு ஆயுத நாடு: முஷாரப் எச்சரிக்கை
'தி இந்து' ஆன்லைன் வாசகர் கேசவ் பல்ராம் கருத்து:
இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) இந்தியப் படைகளை இறக்கினார். அப்பொழுது அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக 7வது படைத்தளம் கப்பலை அனுப்பியது. இந்திய படையினை எதிர்கொள்ள இயலாமல் பாகிஸ்தானிய படைகள் சரணடைந்தன.
இந்திய உதவியால் வங்கதேசம் உதயமானது. அமெரிக்காவுக்கு பயப்படாமல் தைரியமாக பிரதமர் அவர்கள் அப்பொழுது செயல்பட்டார். நம்மைச் சுற்றி பாகிஸ்தான் போன்ற பல பூச்சாண்டிகள் இருந்தாலும் நாம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என்பது உலகம் முழுமைக்கும் தெரியும்.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா செயல்பட்டால் அதற்கு ஆதரவாக உலகின் பல நாடுகள் குரல் கொடுக்கும். இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் அனுப்பிவிட்டது. ஆனால் பாகிஸ்தானோ, இந்தியாவிற்குள் நுழைய முயற்சித்துக் கொண்டிருக்கிறது, பலமுறை தோற்றுப்போய்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT