Published : 27 Jun 2015 04:50 PM
Last Updated : 27 Jun 2015 04:50 PM
செய்தி:>ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி வழக்கு விசாரணைக்கு ஏற்பு: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
'தி இந்து' ஆன்லைன் வாசகர் சுப்பிரமணியன் கருத்து:
நமது நாட்டில் கல்வி என்பது டாஸ்மாக் போல ஒரு வியாபாரமாகி விட்டதால் எல்லோரும் ஏதேனும் ஒரு பட்டதை விலைக்கு வாங்குவது காகிதப் பட்டத்தைவிட எளிதாகி விட்டது. எத்தனையோ போலிக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் இந்த நாட்டில் உள்ளன.
இன்னும் ஆழமாகப் பார்த்தால் நிறைய டாக்டர்கள் என்கிறீர்கள், வக்கீல்கள் போலியாக பட்டம் பெற்றிருப்பது வெளியே வரும். அரசன் ஆண்ட காலத்தில் அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி. இன்றைய ஜனநாயக காலத்தில் குடிகள்தான் அரசர்கள் ஆகையால் குடிகள்
எவ்வழி அவ்வழி ஆட்சியாளர்கள். ராகுல் காந்தியின் பட்டமே போலி பட்டம் என்கிறார்களே அது உண்மையா அப்படியென்றால் உண்மையே உண்மை பட்டமே உன் விலையென்ன?
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்று சொல்வதுபோல் இருக்கிறது. சட்டத்தின் முன்னே எல்லாரும் சமம் என்பது உண்மையென்றால் தார்மிக அடிப்படையில் குறைந்தபட்சம் ஸ்மிருதி இராணி தன் பதவியை தானே முன் வந்து ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பிரதமராவது தன் பெயர் ரிப்பேர் ஆக்காமலிருக்க அவரை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும்.
ஒரே விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அணுகுமுறை என்பது ஜனநாயக நாட்டில் தவறான முன் உதாரணமாகி விடும். அரியலூர் ரயில் விபத்தில் தன்பங்கு இல்லாவிடினும் லால்பஹதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார். அப்போதைவிட இப்போது ஜனங்களுக்கு அதிக அரசியல் விழிபுணர்வு உள்ளது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT