Published : 11 Jun 2015 02:22 PM
Last Updated : 11 Jun 2015 02:22 PM

மாணவர்களைக் கண்டிப்பதில் வரம்பு வேண்டும்: செம்பியன்

செய்தி:>ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து பள்ளி மாணவர்கள் 2 பேர் தற்கொலை: தேர்வில் தோல்வியால் திருமங்கலம் அருகே பரிதாபம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் செம்பியன் கருத்து:

ஆசிரியர்களின் வரம்பற்ற சொல்லாடல்களை கட்டுப்படுத்தவேண்டும்- திறன் குறைந்த மாணவரை நோக்கி- 'நீயெல்லாம் உயிரோட இருந்து என்ன செய்யப்போற? - உன்ன பெத்ததுக்கு உங்கப்பன் ஒரு மாட்டை பெத்திருக்கலாம்' என்று மற்ற மாணவர்கள் முன்னிலையில் சொன்னால் - அந்த மாணவனில் மனநிலை எப்படி இருக்கும்?

இப்படி தாறுமாறாக பேச அந்த ஆசிரியருக்கு என்ன உரிமை? இந்த ஆசிரியரின் மகன்/மகள் எந்த அளவுக்கு திறனற்று இருக்கிறான்[கிறாள்] என்று யாருக்கு தெரியும்? இந்தமாதிரி ஆசிரியர்களுக்கு இந்த பள்ளி முதல்வர்/தாளாளர் சப்போர்ட் வேறு. ஆசிரியர்கள் வரம்பற்று பேசுவதை குறைத்துக்கொள்ள/கைவிட வேண்டும்.

ஒருக்கால் இந்த மாணவர்கள் மருத்துவமனையில், 'இந்த ஆசிரியரது வரம்பற்ற சொற்களால் தற்கொலை செய்துகொள்கிறோம்' என்று மரண வாக்குமூலம் அளித்திருந்தால், அப்போது இந்த வாத்தியார்களின் கதி என்ன? - யாகாவாராயினும் நா காக்க - கற்பித்தால் மட்டும் போதாது. தாமும் அது போன்று வாழ்ந்து காட்டுபவரே ஆசிரியர். தற்காலத்தில் எந்த ஆசிரியருக்கு தெரிகிறது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x