Published : 03 Jun 2015 06:47 PM
Last Updated : 03 Jun 2015 06:47 PM
கட்டுரை:>வீராணம் ஏரிப் படுகையில் ஒரு பயணம் - சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு ஏன்?
'தி இந்து' ஆன்லைன் வாசகர் செம்பியன் கருத்து:
வீராணம் ஏரியின் நீர் விவசாயத்துக்கு கிடையாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயம் இல்லை என்றால் இந்த சென்னைவாசிகள் எதை உண்பார்கள்? கல்லையும், மண்ணையுமா? சென்னையில் குடிநீர் வீணாக்கப்படுகிறது. அடுக்கக குடியிருப்புகளில், ஷவருக்கு நீர் அழுத்தம் தேவை என்பதற்காக, தேவையற்ற நேரங்களிலும் நீர் திறப்பு இருந்து கொண்டே இருக்கிறதே? இதை யார் தடுப்பது?
அரசு அதிகாரிகள் குடியிருப்பில் எல்லாப் பயன்பாட்டுக்குமே குடிநீரையே உபயோகிக்கும் பொறுப்பற்றத்தனம். இதை யார் தட்டி கேட்பது? பழவேற்காடு ஏரியில் கலக்கும் நன்னீர் ஆறுகளின் நீராதாரத்தை ஒழுங்காக பயன்படுத்தினாலே சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.
பழவேற்காடு ஏரியில் சுமார் 2 கி.மீ. அகலத்துக்கு கடல் நீர் உள்நுழையும் இடத்தில் மட்டும் மதகு/சுவர் தேவை. இதனை முன்னாள் பொ.ப.து பொறியாளர் ஒருவர் தொடர்ந்து எழுதி, எழுதி சலித்ததுதான் மிச்சம். சில்லறை அடிக்க இயலாது என்ற காரணத்தால், அரசு தயங்குகிறது. நன்னீராதாரங்கள், சென்னைக்கு அருகில் அதிகம் இருந்தும் அரசு பயன்படுத்த தயங்குகிறது. அது ஏன்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT