Published : 25 Jun 2015 02:26 PM
Last Updated : 25 Jun 2015 02:26 PM

மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள எவருமில்லை - ஆனந்த்

செய்தி:>ஹெல்மெட் வாங்கிய ‘பில்’ சமர்ப்பிக்க வேண்டுமா? - வாகன ஓட்டிகள் எதிர்ப்பு

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஆனந்த் கருத்து:

இந்த ஹெல்மெட் சட்டத்திற்கு பின்னால் என்ன நடந்தது தெரியுமா? சமீபத்தில் கேகே நகரில் போக்குவரத்து காவல் துறையினால் நடந்த விபத்தினால் இந்த உத்தரவு பிரபிக்கபட்டது. உயிரிழந்த அந்த இளைஞனுக்கு காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பணம் வரவில்லை.

அதற்காக அவன் குடும்பத்தினர் நீதிமன்றம் சென்றபோது காப்பீட்டு நிறுவனம் உயிர் இழந்தவர் ஹெல்மெட் அணியாமல் சென்றது தான் உயிர் இழப்புக்கு காரணம் என்று வழக்கை திசை திருப்பியது. இதனால் கடுப்பு ஆன நீதிபதி அனைவரும் ஹெல்மெட் அணியும்படி உத்தரவு போட்டார்.

உண்மையில் செய்யவேண்டியவை என்ன காவல் துறை அத்துமீறலைத் தடுக்க வேண்டும். காப்பீட்டு சட்டத்தில் மற்றம் வேண்டும். மக்கள் மேல் ஹெல்மெட் காப்பீட்டு சட்டம் திணிக்கக் கூடாது. கட்டாய காப்பீடு செலுத்தியும் அது மக்களுக்கு உபயோகம் இல்லை. அனைத்துப் பணமும் பன்னாட்டு முதலாளிகளுக்கு செல்கிறது. மக்களின் தேவைகளை புரிந்து கொள்ள இந்தியாவில் எவரும் இல்லை சொகுசு ஏசி கார்களில் செல்லும் அவர்களுக்கு மக்களின் கஷ்டம் எப்படி தெரியும் ??

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x