Published : 12 Jun 2015 06:50 PM
Last Updated : 12 Jun 2015 06:50 PM
கட்டுரை:>ஒரு நதியின் வாக்குமூலம்: மனிதர்களால் களங்கப்படாத மோயாறு!
'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஸ்ரீனிவாசன் கருத்து:
இயற்கையோடு நாம் இணைந்து வாழ்ந்தால் எப்படி அது தனக்கும் மற்ற உயிரினங்களுக்கும் நன்மையாக இருக்கும் என்பது உண்மைதான். இந்த பூமியானது உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் குறிப்பாக மனிதனும் ஒரு உயிரினம் என்பதை நாம் நினைவில் கொண்டு வாழும்போது எவ்வளவு பேரானந்தமாக இருக்கும் என்பதினை அனைவரும் உணர்ந்தால் அது மிகவும் பயனளிக்கும்.
இயற்கையில் எந்த ஒரு பொருளையும் உருவாக்க மனிதனால் இயலாதபோது எதற்காக இயற்கையின் படைப்புகளான காடுகள், மரங்கள், செடிகொடிகள், ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள், கனிம வளங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள், மற்ற உயிரினங்கள் என பலவற்றையும் மனிதன் சிரழித்து வரவேண்டும்.
இயற்கையின் சமநிலை மாறுதல் அடையும்போது அதனால் உண்டாகும் பேரழிவினை இந்த மனிதனால் தாங்கிக்கொள்ள இயலுமா?? பேரழிவு என்பது நில நடுக்கம், வெள்ளப்பெருக்கு, வறட்சி, சுனாமி போன்றனவாகும். சற்றே சிந்திப்போமா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT