Published : 13 Jun 2015 04:44 PM
Last Updated : 13 Jun 2015 04:44 PM
'தி இந்து' ஆன்லைன் வாசகர் விஜயகுமார் கருத்து:
நாற்பது ஆண்டுகளில் போக்குவரத்துக் கழகங்கள் அபரிமிதமான வளர்ச்சியை தங்கள் சொந்த நிதியிலிருந்தே அடைந்திருக்கிறார்கள். நிலம், கட்டடம் போன்ற சொத்துகளையும் உருவாக்கி உள்ளனர். தமிழகத்தின் எப்பகுதிக்கும் ஒரு முன்பதிவுமின்றி குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய இயலுவது இவர்களால்தான்.
இதையும் தவிர அரசுக்கு வேறு யாரையும்விட மிக அதிகமாக வரி கொடுப்பவர்களும் இவர்களே. தமிழ் நாட்டில் அனைத்து கிராமங்களும் போக்குவரத்து வசதி இவர்களாலேயே பெற்றது. வேலை வாய்ப்புடன் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்தது. இன்னும் நாட்டுடமையால் ஏற்பட்டுள்ள நன்மைகள் ஏராளம்.
குறைகள் அனைத்தும் அரசு நினைத்தால் ஓரிரு மாதங்களில் சரி செய்யக்கூடியதே ஊழல் இருந்தால் கண்டிப்பாக அதை களையவேண்டும். அதை விடுத்து அருமையான உட்கட்டமைப்பை நாற்பது ஆண்டுகள் பாடுபட்டு வளர்த்த நல்ல நிறுவனத்தை கலைக்க எண்ணாதீர்கள்.
அண்ணாவின் நாட்டுடமை கொள்கையால்தான் இந்தியாவிலேயே மிக குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இங்கு ஓட்டப்படுகின்றன மிக அதிக அளவில் கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இயக்குவதால்தான் நஷ்டம் வருகிறது. தனியார் பேருந்துகள் கிராமங்களுக்கு பஸ் ஓட்டினாலும் நஷ்டம்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT