Published : 04 Jun 2015 06:58 PM
Last Updated : 04 Jun 2015 06:58 PM
செய்தி: மதிய உணவு திட்டத்தில் முட்டைக்கு பதிலாக காய்கறிகளை வழங்கலாம்: மேனகா காந்தி யோசனை
'தி இந்து' ஆன்லைன் வாசகர் சு.அகத்தியலிங்கம் கருத்து:
மத்திய பிரதேச மாநிலத்தை ஆளும் பாஜக அரசு. குழந்தைகளுக்கான சத்துணவில் இனி முட்டை கிடையாது. ஏனெனில் அது புலால் உணவென கூறியுள்ளது. இங்கே இதேபோல் ஜெயலலிதாவும் லோககுரு யோசனை கேட்டு முட்டைக்கு தடா போட்டதும்; தோல்விக்குப் பிறகு படிப்பினை பெற்றதும் மறக்கலாகாது.
மத்திய அரசு கல்வி நிலையங்களில் புலால் உணவு தடை செய்யப்பட்டுள்ளது. இங்கே மதுரை உச்சநீதிமன்றக் கிளை வளாகத்திலும் புலால் உணவு கிடைப்பதில்லையாம்; எதிர்ப்பு தெரிவிக்க ஒரு வழக்கறிஞர் முட்டை பிரியாணி விற்றிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டுள்ளது.
அதனை எதிர்த்த வழக்கில் பாஜக அரசு பதில் சொல்லும் போது மத அடிப்படையில் தடை செய்யவில்லை என்று கூறியது. அப்படியானால் கோழி, ஆடு நிலை என்னவென்று கேள்வி எழுப்பப்பப்பட்டது. விரைவில் அவற்றுக்கும் தடை விதிக்க அரசு பரிசீலித்து வருவதாகக் கூறியது பாஜக அரசு.
மாட்டுக்கறிக்குத்தானே தடை என இருப்போரே! நாளை ஆட்டுக்கும், கோழிக்கும், ஏன் மத்திய பிரதேச அரசு போல் முட்டைக்கும் தடை வரலாம். மாட்டை தடுத்து, ஆட்டைத் தடுத்து, முட்டையைப் பறித்து இலை தழைகளை மட்டுமே தின்னச் சொல்லுவார்களோ இவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT