Published : 02 Jun 2015 05:16 PM
Last Updated : 02 Jun 2015 05:16 PM
கட்டுரை:>நீரின்றி அழியும் உலகு!
'தி இந்து' ஆன்லைன் வாசகர் சசிபாலன் கருத்து:
தண்ணீர் மலிவாக கிடைப்பதால்தான் என்னவோ நம் நாட்டில் பல இடங்களில் அது மிகவும் வீணடிக்கப்படும் பொருளாகவே இன்னமும் உள்ளது. எனக்குத் தெரிய ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள எனது உறவினர் வீட்டில் அவ்வப்போது பெய்யும் மழைநீரை சேமித்து வைத்து, ஏறத்தாழ ஆண்டு முழுவதும் அவர்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்து கொள்கிறார்கள். உண்மையில் இது பாராட்டிற்குரிய விசயமாகும்.
ஆனால் அரசோ மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை வறட்சி பகுதிக்கு அனுப்பி குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்த உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வீணாக கடலில் கலக்க விட்டு வேடிக்கை பார்ப்பது மிகப்பெரும் கொடுமை. உரிய நடவடிக்கைகள் ஏதும் இல்லை.
வாக்கு வங்கி என்ற ஒரே குறிக்கோளுக்காக திட்டமில்லா இலவச செலவினங்களில் பல ஆயிரம் கோடிகளை கொட்டி செலவு செய்யும் அரசு, மனிதன் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரமான மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT