Published : 15 Jun 2015 05:50 PM
Last Updated : 15 Jun 2015 05:50 PM
செய்தி:>ரூ.1,500 கோடியில் அணு உலை விபத்து காப்பீடு நிதியம்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் பாலகிருஷ்ணன் கருத்து:
"நாங்கள் இஙகு வந்தது தொழில் நடத்ததான், வரிகட்ட அல்ல." வோடோபோன் நிறுவனம் வரிஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அந்நிறுவனம் நீதிமன்றத்தில் கம்பீரமாக அளித்த பதில் இது. இது நடந்தது காங்கிரஸ் ஆட்சியில். இதோ நாங்கள் என்ன சளைத்தவர்களா? என பாஜக அரசு தன் பங்குக்கு அந்நிய முதலீட்டுக்கு அளித்துள்ள பரிசு இது. அந்நிய நிறுவனங்கள் இங்கு வந்து அனு உலைகளை அமைப்பார்களாம்.
வரும் லாபம் அனைத்தையும் அவர்கள் நாட்டுக்கு கொண்டுபோவார்களாம். ஆனால் அவர்கள் அமைத்த அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டால் நட்ட ஈட்டுக்கான பொறுப்பை நம்நாட்டிலுள்ள மக்களின் பணத்தில் இயங்கும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளுமாம்.
இதைவிட மக்களுக்கு எந்த ஆட்சியாளரும் துரோகம் செய்துவிட மடியாது. "பொழுதெல்லாம் எம் செல்வம் எம் செல்வம் கொள்ளை கொண்டு போவதோ." என்ற பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது. பாரதியின் காலத்தில் பிரிட்டிஷார் நேரடியாக கொள்ளை அடித்துச்சென்றனர்.
இன்றோ மக்களிடம் வாக்குகளைப்பெற்ற ஆட்சியாளர்கள் தங்கத்தட்டில் வைத்துத் தருகிறார்கள். ஆனால் தேசபக்தி குறித்து பேசுவதில் காங்கிரஸாரும் சரி, பாஜகவினரும் சரி ஒருவருக்கொருவர் சளைப்பதில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT