Published : 17 Jun 2015 10:49 AM
Last Updated : 17 Jun 2015 10:49 AM

பள்ளிக் குழந்தைகள் சுகாதாரம் முக்கியம்: சுப்பிரமணியன்

செய்தி:>மதுரை: அரசு பள்ளி ஆசிரியர்களின் காலில் விழுந்து பாராட்டிய தொழிலதிபர்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சுப்பிரமணியன் கருத்து:

இப்படி படிப்புக்கு மரியாதை செய்வது போலே ஒவ்வொருவரும் தான் படித்த பள்ளிக்கு நல்ல பாத் ரூம் கட்டிக் கொடுக்கலாம். அதை பராமரிக்க நிதி ஏற்படுத்தி ஆசிரியர் மாணவர் சங்கம் வழியாக 3 ஆட்களை நியமிக்கலாம். எப்போதும் அவற்றை சுத்தமாக வைத்திருந்தால் குழந்தைகள் ஆரோக்கியம் சிறக்கும்.

பள்ளியில் பாத்ரூம் போக முடியாமல் அசுத்தமாக இருப்பதால் தண்ணீர் குடிக்காமல் சரியாக சாபிடாமல் பள்ளியில் படிப்பில் கவனக்குறைவு ரத்தத்தில் சர்க்கரை குறைவதால் மனசோர்வு உடல் சோர்வு வளர்ச்சி குறைபாடு நினைவாற்றல் குறைவு ஏற்படுகிறது. மேலும் சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரகக் கல் காரணங்களால் பெண்குழந்தைகளுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

ஒரு நாளில் கிட்டத்தட்ட 8 மணி நேரம் இப்படி சிறுநீர் மற்றும் மலத்தை அடக்குவதால் ஓர் நாட்டின் எதிர்கால தலைமுறையின் ஆரோக்கியம் கேள்விக் குறியாக இருப்பது மிகவும் வேதனை தரும் கிலியை ஏற்படுத்தும் விஷயம் சமுதாய பொறுப்பில் முன்னே நின்று நாம் அனைவரும் நம் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x