Published : 18 Jun 2015 06:00 PM
Last Updated : 18 Jun 2015 06:00 PM
செய்தி:>இதுவரை முதல்பாதி.. இனிதான் மறுபாதி: பொங்கிய லிங்குசாமி
தி இந்து ஆன்லைன் வாசகர் மஞ்சூர் ராசா கருத்து
நல்லப் படங்களை குறைந்த செலவில் எடுத்தால் நிச்சயம் ஓடும். எகா: காக்கா முட்டை, பிட்சா, ஜிகர்தண்டா போல. குப்பைப் படங்களை காசை கொட்டி எடுத்தாலும் ஓடாது எகா: லிங்கா, ஐ, அஞ்சான், உத்தமவில்லன்.
இதை திரைப்பட உலகினர் புரிந்துக்கொள்ளவேண்டும். ஒரு பாட்டுக்கு வெளிநாடு, எக்கச்சக்க செலவு செய்தால் ஓடிவிடும் என நினைப்பது முட்டாள் தனம். இன்றைய சிறுவர்களுக்கு கூட பல விசயங்கள் நன்றாகவே தெரியும்.
ஒருத்தன் நூறு பேரை பாய்ந்து அடிப்பதும், நூறு ஜீப்களை ஓட விடுவதும், க்ராபிக்ஸ் ஜாலங்கள் புரிவதும் காசைதான் தீர்க்குமே தவிர நல்லப் படத்தை கொடுக்காது. தோல்வியை தான் தரும். பின் கடனாளியாக போகவேண்டியதுதான்.
திரையுலகில் எத்தனையோ பேர் நொந்து நூடுல்ஸ் ஆகியிருந்தாலும் பலருக்கும் அது தெரிவதில்லை. ஜிகினா வேலைகள் எதற்கும் உதவாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT