Published : 01 Jun 2015 04:11 PM
Last Updated : 01 Jun 2015 04:11 PM
'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஆர்.சுப்பிரமணி கருத்து:
உச்ச நீதிமன்றமும் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கும் - கார்களில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஓட்டுவதற்கும் - பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு வரைமுறை வகுத்தும் எந்த மாநில அரசும் கடைபிடிப்பதாக தெரியவில்லை. ஒருவேளை இவையெல்லாம் தடை விதிக்கும் பட்சத்தில் இவர்கள் நடத்தும் தொலைக்காட்சிக்கு விளம்பர வருவாய் இல்லாமல் போய்விடும்,
அதனால் தடை விதிக்காமல் இருக்கலாம், பொதுமக்களாகிய நாமும் பிளாஸ்டிக் பயன்பாட்டிலிருந்து மாற வேண்டும். பொதுமக்களின் பயன்பாட்டிலிருந்து மாறவேண்டும் என்றால் ஒரு கிலோ கொள்ளவு 40 மைக்ரான் பிளாஸ்டிக் பை 5 ரூபாய் என்ற விலை வைத்தால் மக்களின் பயன்பாடு குறைந்து விடும்.
மழைகாலத்தில் பெருநகரங்களில் ஏற்படும் சாக்கடை அடைப்புக்கு முக்கிய காரணம் இந்த பிளாஸ்டிக் பைகளே என்பதை நகரவாசிகள் அனைவரும் மறக்க வேண்டாம். பெரு நகரங்களுக்கு அடுத்து இப்போது குக்கிராமங்களும் இப்போது இந்த பிரச்னையை சந்திக்கின்றன. இதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இல்லையேல் மின்னணுக் கழிவால் என்ன பிரச்னையை சந்திக்கின்றமோ அதைவிட அதிகமான இடர்களை நாம் சந்திக்க நேரிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT