Published : 15 Jun 2015 05:49 PM
Last Updated : 15 Jun 2015 05:49 PM

தேர்தல் ஆணையத்தின் அவசியம் என்ன?- சையது மொஹம்மது

செய்தி:>தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது: தலைமை தேர்தல் ஆணையம் பதில்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சையது மொஹம்மது கருத்து:

தேர்தல் கமிஷனின் மறுப்பும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலும் இந்தியாவை பிரதிபலிக்கிறது. இந்தியாவை ஆள்வோம் எனும் மக்கள் பிரதிநிதிகளுக்கும், இந்தியாவை ஆள்கிறோம் எனும் நிர்வாகிகளுக்கும் இந்தியாவின் தற்கால சூழல், இந்தியாவின் வருங்காலம், இந்தியாவின் இழப்பு, இந்தியாவின் இருப்பு, இந்தியாவின் வளம், இந்தியாவின் வறட்சி, இந்தியாவின் ஆற்றல், இந்தியாவின் குறைபாடு என அடுக்கிக் கொண்டே செல்லக் கூடிய அரசியல், நிர்வாகவியல் பற்றிய அறிவும் ஆற்றலும் இல்லை.

எவ்வித ஆற்றலும் அற்றவர்கள் நாட்டை ஆளத் துடிக்கிறார்கள்/ஆளுகிறார்கள். ஒரு கமிஷன் ஏன் அமைக்கப்படுகிறது? என்ற கேள்வி ஏதும் இல்லாமல் வெறும் வாய்வழி வாய்ப்பாடாய் உருவாக்கப்பட்டுள்ளது இந்தியாவின் கமிஷன்கள் என முடிவுக்கு வரலாம்.

ஒரு நாட்டை ஆள்வதற்கு யார் தகுதியுடையவர் என தெரிவு செய்யும் இடத்திலுள்ள கமிஷனுக்கு தகுதி என்ன என்பதை நிர்ணயிக்க வழியில்லை திராணியில்லை என்றால் அந்த கமிஷனின் அவசியம் என்ன? தேர்தல் கமிஷனின் வேலை தியேட்டரில் வரிசையை ஒழுங்கு படுத்தும், டிக்கட் கிழித்துக் கொடுக்கும் ஊழியனின் தகுதி தான் எனில் தன்னாட்சி அதிகாரம் எதற்கு? சில வேளைகளில் மீசைமுறுக்கும் பந்தா ஏன்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x