Published : 22 Jun 2015 05:59 PM
Last Updated : 22 Jun 2015 05:59 PM

யோகாவை விற்பனைப் பொருள் ஆக்கியது யார்?- செந்தில்

செய்தி:>யோகாவை விற்பனை பொருளாக்கி விடாதீர்கள்: மோடி எச்சரிக்கை

'தி இந்து' ஆன்லைன் வாசகர் செய்தில் அவர்கள் கருத்து:

யோகா என்பது நம் முன்னோர்களால் நமது உடல் / மன நலனுக்காக உருவாக்கப்பட்டது. இதை கும்பலாக செய்யக் கூடாது. ஒரு சிறந்த ஆசிரியரின் கற்பித்தலில் ஒவ்வொரு தனி மனிதரும் அவரது உடல் பலத்திற்கேற்ப தனித்தனியாக பயிற்சி பெற்று பிறகுதான் தனியாக செய்யவேண்டும்.

ஆனால் நடந்தது என்ன, சர்வதேச யோகா தினம் கும்பலோடு கோவிந்தா ஆனது, கின்னஸ் சாதனை என்று பேசபடுகிறது. நீங்கள் இதை மதத்திற்காகவும், உங்கள் கட்சிக்காகவும் அப்பட்டமாக பயன்படுத்த முடிந்தது. பிறகு எப்படி நீங்கள் அடுத்தவருக்கு யோகாவை விற்பனை பொருளாக்கி விடாதீர்கள் என்று வேண்டுகோள் விடமுடியும். அதை தடுக்க முடியாது.

நீங்கள் தூய்மை இந்தியா கொண்டாடி இந்தியா முற்றிலும் தூய்மை ஆகிவிட்டது. அதேபோல் நீங்கள் யோகா தினம் கொண்டாடி கின்னஸ் சாதனை படைத்து, இப்போது இந்தியாவில் எல்லோரும் யோகா கற்றுக்கொண்டாகி விட்டது 2 மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி. வாழ்க உங்களது அர்ப்பணிப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x