Published : 11 Jun 2015 02:22 PM
Last Updated : 11 Jun 2015 02:22 PM
'தி இந்து' ஆன்லைன் டாக்டர் எம்.தாஸ் கருத்து:
புரிதலுடன் கூடிய தொடர்மதிப்பீடு முறையை ( Continuous and Comprehensive Evaluation) உதாசீனப் படுத்துவதால் ஏற்படக்கூடிய கல்வித்துறை கொலை என்றே சொல்லலாம். தேர்வு பயத்தாலேயே 2% சதவிகித மாணவர்கள் ஒன்று: வீட்டைவிட்டு ஓடிவிடுகிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள் (NCERT அறிக்கை).
அதற்காகத்தான் தேர்வே இல்லாமல் தினம்தோறும் சிறுசிறு வாய்மொழி மூலக் கேள்விகள் கேட்டும், படம்போட சொல்லியும் ப்ராஜக்ட் செய்யச் சொல்லியும், வகுப்பறை பங்கேற்றலுக்கும், Assignment செய்ய சொல்லியும், அகராதி பயன்பாட்டிற்கும், வகுப்பறை பங்கேற்றலுக்கும், இதுபோன்ற கல்வி நிகழ்வுகளுக்கு மதிப்பெண் ஜூன் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்து தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்.
சடங்காக நடைபெறும் காலாண்டு அரையாண்டு முழாண்டு தேர்வுகளின் மார்க்கை மட்டும் எடுத்துகொண்டு ரிசல்ட் போடுவது சரியல்ல. கல்வியில் தொடர் மதிப்பீட்டு முறை நல்ல பயன்தரும். இதை கருத்தில்கொண்டு இந்தியா முழுக்க CCE யில் அனைத்து பள்ளிகளுக்கும் SSA and RMSA மூலமாக அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. நடைமுறை படுத்துவதில் என்ன சிக்கல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT