Published : 22 Jun 2015 06:00 PM
Last Updated : 22 Jun 2015 06:00 PM
செய்தி:> புதிதாக ஆவின் பால் அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
' தி இந்து' ஆன்லைன் வாசகர் சச்சிதானந்தம் கருத்து:
மாதாந்திர பால் அட்டை பெற இருப்பிடச் சான்று அல்லது அடையாள அட்டை நகலை சமர்ப்பித்து பால் அட்டை பெறலாம் என்று அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் சான்றிதழ்கள் இல்லாமல் பால் அட்டை பெற முடியாது என்ற நிலை ஊர்ஜிதமாகிறது. ஆனால் நான் கடந்த 20 வருடங்களாக எங்கள் பகுதியில் பால் போடும் பையன் மூலமாக பால் வாங்கி வருகின்றேன்.
இந்த நடைமுறைதான் 99% பால் அட்டைதாரர்கள் கடைபிடிக்கிறார்கள். சமீபகாலகமாக பால் போடும் பையன் அட்டை உங்களது இல்லை, ஆகவே ஒரு கவருக்கு கூடுதலாக 25 பைசா கொடுக்க வேண்டும் என்று வாங்கிச் செல்கிறான். பெரும்பாலும் வீட்டுப் பெண்களிடம் பணம் வாங்கிவிடுகிறான்.
இதை அறிந்து நான் கேட்டபோது வேண்டாம் என்றால் நீங்களே புதிய அட்டை வாங்கிக்கொள்ளுங்கள் என்று பால் போட மறுக்கிறான். பலருக்கு இதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை. மொத்தமாக அவன் கேட்கிற பணத்தை கொடுத்து விடுகிறார்கள். எனவே இந்தக் கொள்ளையைத் தடுக்க பழைய அட்டைகளுக்கும் அடையாளச் சான்று பெறவேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT