Published : 27 Jun 2015 03:40 PM
Last Updated : 27 Jun 2015 03:40 PM

இதனாலேயே அமெரிக்கா அமெரிக்காவாக இருக்கிறது - தாவூத்

செய்தி:>ஜிண்டால்: அமெரிக்க அதிபர் ரேஸ் களத்தில் முதல் இந்திய வம்சாவளி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் தாவூத் கருத்து:

நமது நாட்டில் அண்டை மாநிலத்தில் போய் முனிசிபல் கவுன்சிலருக்கே நிற்கமுடியாத சூழ் நிலை. மன்னார்குடிகாரனுக்கு பட்டுக்கோட்டைகாரன் குடிப்பதற்கு தண்ணீர் எடுக்காவிட மாட்டேனென்கிறான். தெலுங்கானா காரனுக்கு, நேற்றுவரை ஓன்றாய் இருந்த ஆந்திரா காரன் விட்டுகொடுக்க மறுக்கிறான்.

அப்படி இருக்கும் இந்தகாலத்தில், எங்கோ இருந்து குடிபெயர்ந்தவனுக்கு, நாட்டின் முதல்குடிமகன் பதவிக்கு போட்டிபோட அனுமதிப்பது எவ்வளவு பரந்த மனப்பான்மை. மண்ணின் மைந்தன் என்ற குறுகிய வட்டம் அங்கே கிடையாது. இதுபோன்ற காரணங்களால்தான் அமெரிக்கா அமெரிக்காவாக இருக்கிறது.

இந்தியா இந்தியாவாக இருக்கிறது. நமக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரே சுதந்திரம் அடைந்து விட்டார்களல்லவா? ஒருவேளை இன்னும் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் நமக்கும் அந்த மனப்பக்குவம் வருமோ என்னவோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x