Published : 17 Jun 2015 06:01 PM
Last Updated : 17 Jun 2015 06:01 PM

ராணுவம், சிவில் வாகனமும் பயன்படுத்தும்: மார்ஷல் தம்பி

செய்தி:>'தி இந்து' செய்தி எதிரொலி: காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டைக்கு டாக்சிகளை பயன்படுத்துவதை நிறுத்தியது ராணுவம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மார்ஷல் தம்பி கருத்து:

இராணுவத்தின் மிகமிக அத்தியாவசிய தேவைக்காக சிவில் வாகனங்களை யெடுப்பது தொன்று தொட்டு நடைமுறையில் உள்ளதுதான். தேடுதல் வேட்டையின்போது, இராணுவ வாகனத்தைக் கண்டால் உடனே தீவிரவாதிகள் உஷார் அடைந்து இராணுவத்தின் மீது சுடுவர் அல்லது பதுங்கிக்கொள்வர்.

சிவில் வாகனத்தைக் கண்டால் அவர்கள் நிதானமாக இருப்பர், இராணுவத்துக்கு அவர்களைப் பிடிப்பதற்கோ அல்லது அழிப்பதற்கோ இந்த வாகனம் இலகுவாக இருக்கும். இது யுத்த காலத்துக்கு அவசியம். இங்கே உள்ள குறைபாடு என்னவென்றால், டாக்ஸியின் நம்பரை வைத்து டாக்ஸியின் உரிமையாளரை, தீவிரவாதிகள் வதம்/உபத்திரவம்/சித்திரவதை செய்வர்.

அத்தியாவசிய தேவை வந்தால் இன்னும் அதை பயன்படுத்துவர். இதில் எந்த மாற்றவும் இருக்காது. ஆனால் முறையாக, இழப்பீடாக (அரசு நிர்ணைத்துள்ளபடி இவ்வளவு என்ற) தொகையை உரிமையாளருக்கு கண்டிப்பாகக் கொடுப்பர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x