Published : 15 Jun 2015 05:49 PM
Last Updated : 15 Jun 2015 05:49 PM
செய்தி: > மியான்மரில் புகுந்து தீவிரவாதிகளை அழித்த இந்திய ராணுவ நடவடிக்கைக்கு இஸ்ரேலிய தூதர் ஆதரவு
'தி இந்து' ஆன்லைன் வாசகர் மணி கருத்து:
கண்மாய்க்கு பயந்து கடலுக்குள் போய் விழுந்தவன் கதை தெரியுமா? நம்ம மோடி கொஞ்சம் சுதாரித்து விலகிக் கொண்டால் நல்லது. இஸ்ரேல் இப்பொழுது பழைய இஸ்ரேல் இல்லை. ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு பல வருடங்களாக இஸ்ரேலின் தூக்கத்தை கெடுத்து விட்டது.
ஐ.நா. முதல் அமெரிக்கா வரை போய் புலம்பிப் பார்த்து, ஓய்ந்து உட்கார்ந்து விட்டது. தப்பித் தவறி ஈரானை தாக்கினால் உண்டாகும் விளைவு என்னவென்பது பற்றியும் தெரியும். மற்றொரு புறம் ஐ.எஸ் எனும் சுனாமி உருவெடுத்து நிற்கிறது. அதன் கைகளிலும் அணு ஆயுதத் தொழில்நுட்பம் உருவாக்கி இருக்கிறதென்று ஆஸ்திரேலியா அறிவித்து விட்டது.
இஸ்ரேல் எதிரிகளை 25 வருடங்களுக்கு முன்னால் கணித்ததுபோல இப்பொழுது நிலைமை இல்லை. மோடி அவர்களே நமக்கு தேவை இல்லாத விஷயத்தை விட்டுவிட்டு நம்ம வேலையை மட்டும் பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT