Published : 25 Jun 2015 02:26 PM
Last Updated : 25 Jun 2015 02:26 PM

செயல்படுகிறதா ஐஐஎம் ஆய்வுப் பணிகள்?- சுந்தரமூர்த்தி

தலையங்கம்:> ஐஐம் நிறுவன மசோதா அவசியமானதா?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சுந்தரமூர்த்தி கருத்து:

ஒரு நாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள்தான் அந்த நாட்டில் உள்ள பொருளாதார சீர்கேடுகளை, வரவேண்டிய மாற்றங்களை விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து அதற்கு சில தீர்வுகளும் தரும் என்று நம்பப்படுகிறது. 100 கோடி மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், முறைசாராத் தொழிலாளர்கள் என்று நிறைய உள்ளன.

சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் ஆகியும் பீகார், உபி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து அதிகத் தொழிலாளர்கள் தமிழகத்திற்கு குறைந்த கூலிக்கு வேலைக்கு வருகின்றனர். அப்படியென்றால் அந்த மாநிலங்கள் வளர்ச்சி அடையவில்லையா? அந்த மாநில வருமானங்கள் எங்கே செல்கிறது? அங்கே மீதி இருப்பவர்கள் யார்? இதைப்போன்ற ஆய்வுகளை இந்த ஐஐஎம்கள் நடத்தியுள்ளனவா?

பாதுகாப்புத் துறைக்குகூட எம்பிஏ படிப்புகள் வந்துவிட்டன. ஆனால் கடலில் விழுந்த விமானப்படை விமானத்தை கண்டறிய ரிலையன்ஸ் கப்பலின் தயவை நாடும் நிலையில் நாடு ஏன் உள்ளது? பாதுகாப்பு சாதனங்களை அயல்நாட்டில் இருந்து ஏன் வாங்கவேண்டும்? இதுபோன்று ஏதாவது ஆராய்ச்சி இந்த ஐஐஎம்களில் நடந்ததுண்டா? அப்படியில்லையென்றால் இந்த ஐஐஎம்களால் என்ன பிரயோஜனம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x